டாடாவுக்கு டாடா காட்டி மஹிந்திராவில் இணைந்த ஒருத்தரால் எல்லாமே மாறி போச்சு! கஸ்டமர்ஸ் ஈ மாதிரி மொய்க்குறாங்க!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, இந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மஹிந்திராவின் கார்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த காலங்களில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்தை பிடித்துவந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த 6 மாதங்களில் மட்டும் கார்கள் விற்பனை 4 முறை ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை முந்தி 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.
இது கடந்த ஜூன் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா நிறுவனம் ஜூனில் மொத்தம் 47 ஆயிரத்து 306 கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் 44 ஆயிரத்து 24 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இவ்வாறு மஹிந்திராவின் கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான காரணம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரபல கார் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் (Pratap Bose) அவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் மஹிந்திராவுக்கு மாறியது ஆகும்.
இதற்கு முன்பே கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து தார் (Thar), எக்ஸ்யூவி700 (XUV700) போன்ற தரமான கார்களை அறிமுகம் செய்து இன்றைய கால வாடிக்கையாளர்களை மஹிந்திரா அதிகமாக கவர ஆரம்பித்துவிட்டது. மஹிந்திராவில் இருந்து நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ (Scorpio) காரின் புதிய அப்டேட் வெர்சன் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டதும் கூட சமீப காலத்தில் மஹிந்திராவின் வெற்றிக்கரமான தயாரிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் பிரதாப் போஸ் இணைந்தது மஹிந்திராவுக்கு பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்துள்ளது. மஹிந்திராவில் இணைந்த உடன் பிரதாப் போஸ் உருவாக்கிய முதல் காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) உடனடியாகவே மக்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து, மஹிந்திரா தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனமும் பிரதாப் போஸின் கை வண்ணத்தில் மக்களை கவர்ந்து இழுக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மார்க்கெட்டில் மிக பெரிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றன. இதில் குறிப்பாக, எக்ஸ்இவி 9இ ஆனது விலைமிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் காராக இருப்பினும் பணக்காரர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனாலேயே தொடர்ச்சியாக, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கி வருவதை பார்க்க முடிகிறது.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இறங்குவதற்கு கடந்த வருடங்களில் மிகவும் யோசித்துவந்த மஹிந்திரா நிறுவனம், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் அளித்துள்ள ஊக்கத்தினால் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் தீவிரமாக இறங்க ஆரம்பித்து இருப்பதும் இந்த நிறுவனத்தின் அதிரடி முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாகும். அதேபோல், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் (Bharat NCAP Crash Test) மஹிந்திராவின் கார்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றிருப்பதும் மஹிந்திராவின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவுக்கு எல்லாமே ஒருசேர கூடி வருகிறது. எதிர்கால எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் மஹிந்திரா எவ்வாறு தனக்கான இடத்தை பிடிக்க போகிறதோ என நாம் யோசித்துவந்த நிலையில், பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் மூலம் அதிரடியாக நுழைந்திருப்பதுடன், இவ்வாறான புதிய எலக்ட்ரிக் கார்களை இனி மஹிந்திராவில் தொடர்ச்சியாக எதிர்பார்க்கலாம். இவற்றுடன் சேர்த்து, எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தை போல் BaaS என்கிற எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை குத்தகைக்கு விடும் முறையையும் பின்பற்ற ஆரம்பித்தால் மஹிந்திராவை இனி கையில் பிடிக்க முடியாது.


Click it and Unblock the Notifications









