சீன மார்க்கெட்டையே டெஸ்லா புரட்டி போட்டு இருக்கலாம், ஆனால் அதுக்காக இந்தியாவை சாதாரணமா எடுத்துக்க முடியாது!

டெஸ்லா (Tesla), அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் நுழைந்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மும்பையில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை (Dealership Showroom) திறந்த டெஸ்லா, அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் இரண்டாவது ஷோரூமை திறந்தது. இவற்றை தொடர்ந்து 3வது ஷோரூமை தென்னிந்தியாவை கவர் பண்ணும் வகையில் பெங்களூருவில் திறக்க டெஸ்லா தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்தியாவில் சூப்பர்சார்ஜர் (Supercharger) நிலையங்களையும் நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், மும்பையில் ஷோரூம் திறக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையிலேயே இந்தியாவில் முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை ஏற்கனவே டெஸ்லா திறந்துவிட்டது. இதனால், மும்பையில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் வசிப்பவர்கள் டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரை வாங்கினால் எளிதாக அவற்றிற்கு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியை பெறலாம்.

tesla electric cars super chargers

டெஸ்லா சூப்பர்சார்ஜர் நிலையம் என சொன்னாலும், இந்த நிலையத்தில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் மட்டுமின்றி, குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக்கூடிய ஸ்டாண்டர்டான சார்ஜர்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் டீலர்ஷிப் ஷோரூம்களை காட்டிலும் அதிகமாக முதலில் சூப்பர்சார்ஜிங் நிலையங்களை நிறுவ டெஸ்லா திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு சூப்பர்சார்ஜர் என்கிற ஒரு ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

ஆனால், அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் பல்வேறு விதமான முறைகளில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், டெஸ்லா கார்களை சார்ஜ் செய்வதற்கான அனைத்து முறைகளையும் வெளிநாட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது ஆகும். நம் நாட்டு டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களை போன்று வீட்டிலேயே சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் வெளிநாடுகளில் டெஸ்லா தனது எலக்ட்ரிக் கார்களை வாங்கும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது.

tesla electric cars super chargers

ஆனால், மற்ற நிறுவனங்களை போல் இல்லாமல், ஹோம் சார்ஜிங் வசதியை அதிநவீன தரத்தில் வழங்குகிறது. அதாவது, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை வாங்கினால், அவற்றிற்கான சார்ஜிங் வசதியை வீட்டிலேயே ஏற்படுத்திக் கொடுக்க டெஸ்லா நிறுவனத்திடம் விண்ணபிக்க வேண்டும். அத்துடன், அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்பின், உங்களுக்கென தனியாக ஒரு தேதி ஒதுக்கப்பட்டு, அந்த நாளில் ஒருவர் உங்களது இருப்பிடத்திற்கு வந்து சார்ஜரை நிறுவுவார். இந்தியாவில் இன்னும் தனது எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகளை (Deliveries) டெஸ்லா துவங்காததால், ஹோம் சார்ஜிங் வசதிகளை வழங்குவதை இன்னும் நம் நாட்டில் துவங்கவில்லை. ஹோம் சார்ஜர், சூப்பர்சார்ஜர் மட்டுமின்றி, 'டெஸ்டினேஷன் சார்ஜர்' (Destination Charger) என்கிற பெயரிலும் சார்ஜிங் வசதியை டெஸ்லா வெளிநாடுகளில் வழங்குகிறது.

tesla electric cars super chargers

இதற்கு அர்த்தம் என்னவென்றால், மக்கள் அதிகமாக கூடும் உணவகங்கள், அலுவலக வளாகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்படும் சார்ஜர்கள் டெஸ்டினேஷன் சார்ஜர்கள் எனப்படுகின்றன. இத்தகைய சார்ஜர்களை அந்தந்த உணவக, அலுவலக, திரையரங்கு நிர்வாகத்துடன் இணைந்து டெஸ்லா ஏற்படுத்திக் கொடுக்கிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் அரசாங்கத்துடனும் கூட இதற்காக டெஸ்லா கூட்டணி சேர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனா போன்ற சவாலான மார்க்கெட்டிலேயே தன்னை நிரூபித்துவிட்டாலும் டெஸ்லாவுக்கு இந்தியா இன்னும் சவாலான மார்க்கெட்டாக உள்ளது. ஏனெனில், மற்ற நாடுகளை காட்டிலும் அதிக விலையில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதனால், டெஸ்லா ஷோரூம்கள், சூப்பர்சார்ஜிங் நிலையங்கள் அடுத்தடுத்து திறக்கப்பட்டாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் டெஸ்லா சற்று மெதுவாகவே தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தி வருகிறது. இதனால், மற்ற சார்ஜிங் ஆப்ஷன்களை உருவாக்குவதில் டெஸ்லா எப்போது இறங்கும் என்பது தற்போதைக்கு கேள்விக்குறி ஆகவே உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 21:46 [IST]
English summary
How tesla electric cars being charged in foreign countries and would be in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X