எக்கச்சக்கமா மைலேஜ் தருது! 100க்கு 81 பேர் இந்த கம்பெனி காரை தான் வாங்குறாங்க!

இந்தியாவில் ஹைபிரிட் செக்மெண்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டொயோட்டா நிறுவனம் இந்த செக்மெண்டில் 81 சதவீத மார்கெட் பங்கை பிடித்துள்ளது. இதில் டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் கார் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீபகாலமாக ஹைபிரிட் கார்கள் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ரக கார்கள் அதிக விலை கொண்டதாகவும் குறைவான ஆப்ஷன் உடனும் விற்பனையாகி வந்தது. ஆனால் இன்று அந்த ரக கார்களின் விலையும் கணிசாக குறைந்துள்ளது. அதிக கார்களும் வர துவங்கிவிட்டன.

Hybrid Car Sale Q1 2025

இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதனால் இந்த ரக கார்களின் வளர்ச்சி சுமார் 118 சதவீதம் வரை அதிகமாகியுள்ளது. டொயோட்டா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான ஹைபிரிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 12,111கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதுவே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 21,489 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் விற்பனை அதிகமாகியுள்ளது. இது ஒட்டு மொத்த ஹைபிரிட் கார் மார்கெட்டில் 81 சதவீத மார்கெட் பங்கை பிடித்துள்ளது.

Hybrid Car Sale Q1 2025

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைகிராஸ், கேம்ரி, வில்ஃபயர் ஆகிய கார்களை இந்த செக்மெண்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு போட்டியா மாருதி நிறுவனமும் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வெறும் 1307 கார்களை மட்டுமே விற்பனை செய்த இந்நநிறுவனம் நடப்பு நிதியாண்டில் 4745 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 263 சதவீத விற்பனை ளர்ச்சியாகும்.

கிட்டத்தட்ட 3 மடங்கு இந்த கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மாருத நிறுவனம் மார்கெட்டில் கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ ஆகிய கார்களை இந்த செக்மெண்டில் விற்பனை செய்து வருகிறது. அடுத்தாக ஹோண்டா நிறுவனமும் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனமும் ஹைபிரிட் கார் விற்பனையில் வளர்ச்சியை அதிகமாக சந்தித்துள்ளது

Hybrid Car Sale Q1 2025

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் வெறும் 59 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 226 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 283 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால் வெறும் 1 சதவீத மார்கெட் பங்கை மட்டுமே வைத்துள்ளது.இந்நிறுவனம் சிட்டி இ:எச்இவி என்ற ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஹைபிரிட் காராக டொயோட்டா இன்னேவா ஹைகிராஸ் கார் தான் இருக்கிறது. இந்தகார் தான் இந்த செக்மெண்டிலேயே காஸ்ட்லியான காராக இருந்தாலும் அதிக மக்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற கார் என்பதால் பலர் இதை விரும்பி வாங்கி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் தருவதால் மக்கள் பலர் ஹைபிரிட் கார்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருவதை காண முடிகிறது. எதிர்காலத்தில் இந்த ரக கார்கள் அதிக டிமாண்டில் இருக்கும் கார்களாக மாறும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 30, 2025, 10:00 [IST]
English summary
Hybrid car sale q1 2025 maruti toyota honda growth report
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X