மலை மாதிரி மைலேஜ் தருது! ஹைபிரிட் காரை இவ்வளவு பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் ஹைபிரிட் கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. சமீப காலமாக இந்த கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துவருகிறது. ஆனாலும் இந்த கார் சிலருக்கு பட்ஜெட்டை தாண்டியில் விலையில் இருகு்கிறது. இதனால் மைல்டு ஹைபிரிட் கார்களையும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இந்நிலையில் 2025ம் நிதியாண்டில் ஹைபிரிட் கார்களின் விற்பனை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது மார்கெட்டில் மாருதி, டொயோட்டா மற்றம் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 3 நிறுவனங்கள் தான் அதிக அளவிலான வாகனங்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2025ம் நிதியாண்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு ஹைபிரிட் கார்களை விற்பனை செய்துள்ளது என்ற தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்தபடி அந்த நிதியாண்டில் மொத்தம் 1,04,800 கார்கள் விற்பனையாகியுள்ளது.

Hybrid Car Sales FY2025

இதில் டொயோட்டா நிறுவனம்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மொத்தம் 82,848 ஹைபிரிட் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அடுத்த இடத்தில் மாருதி நிறுவனம் இருக்கிறது. இந்நிறவனம் மொத்தம் 20,672 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடைசி இடத்தில் ஹோண்டா நிறுவனம் இருக்கிறது.இந்நிறுவனம் வெறும் 1280 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஹைபிரிட் கார்கள் அதிக மைலேஜ் தரும் கார்களாக உள்ளன. இந்த கார் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ஹைபிரிட் கார்களை பற்றி காணலாம்

Hybrid Car Sales FY2025

மாருதி கிராண்ட் வட்டாரா

மாருதி நிறுவனம் கிராண்ட் விட்டாரா என்ற காரில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை உட்புகுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் 116 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் தொழிற்நுட்பம் இருக்கிறது. இந்த கார் 23.77 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இது டொயோட்டா ஹைரைடர் காரை காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மாருதி வெர்ஷன் கார் ஆகும்.

டொயோட்டா ஹைரைடர்

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற காரை தயாரித்ஐது விற்பனை செய்கிறது. இதிலும் கிராண்ட் விட்டாரா கார் போல 116 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் இருக்கிறது. இந்த கார் சிட்டியில் 20.28 கி.மீ மைலேஜூம் ஹைவேயில் 22.85 கி.மீ மைலேஜூம் தருகிறது.

Hybrid Car Sales FY2025

ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி காரில் இ:எச்இவி என்ற ஹைபிரிட் காரை உருவாக்கியுள்ளது. இந்த காரில் 126 எச்பி கொண்ட 1.5 லிட்டர் கொண்ட பெட்ரோல் ஹைபிரிட் செட்டப் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் இ-சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காிரன் மைலேஜை பொருத்தவரை சிட்டியில் 19.80 கி.மீ மைலேஜையும் 22.50 கி.மீ மைலேஜை ஹைவேயில் மைலேஜ் தரும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

டொயோட்டா நிறுவனம் தனது ஹைகிராஸ் காரை ஹைபிரிட் காராக விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் 184 எச்பி பவரை வெளிப்படுத்தும், 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளுது. இந்த கார் சிட்டியில் 13.10 கி.மீ மைலேஜையும், ஹைவேயில் 16.10 கி.மீ மைலேஜையும், வழங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து : ஹைபிரிட்கார்கள் அதிக மைலேஜ் தரும் என்பதால் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. பெரிய கார்களில் மட்டுமே இந்த தொழிற்நுட்பம் கிடைப்பதால் பெரிய அளவில் பிரபலம் இல்லை. வருங்காலங்களில் சிறிய கார்களில் இந்த தொழிற்நுட்பம் வந்தால் நிச்சயம் பெரிய அளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 9:45 [IST]
English summary
Hybrid car sales fy2025 toyota beats maruti honda
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X