ஜிஎஸ்டி குறைந்த சாக்கில் கார்களுக்கு சாலை வரியை உயர்த்திய மாநில அரசு!

ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு வாகனங்களுக்கான சாலை வரியில் அளித்த விலக்கை நிறுத்தி வாகனங்களின் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வாகனங்களின் விலை ரூ1 லட்சம் வரை விலை அதிகரிக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராஜஸ்தான் மாநில் அரசு ஸ்டிராங்க் ஹைபிரிட் காரகளுக்கான சாலை வரியில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 25 சதவீத விலக்கை அறிவித்திருந்தது. இதனால் ஸ்டிராங்க் ஹைபிரிட் காரை மற்ற மாநிலங்களில் வாங்குவதை விட குறைவான செலவில் ராஜஸ்தான் மாநிலத்தில் வாங்கிவிட முடியும் என்ற நிலை இருந்தது.

Hybrid Road Tax Exemption Withdraw

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது ராஜஸ்தானம் மாநில அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த வரி விலக்கை வாபஸ் பெற்றுவிட்டது. இனி நீங்கள் முழுமையான சாலை வரியை செலுத்தியே காரை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளுது.

இதனால் வாகனங்களின் விலை ரூ70,000 முதல் ரூ1 லட்சம் வரை விற்பவனை அதிகரித்துள்ளது. உதாரணமாக டொயோட்டா கேம்ரீ காரை வாங்க வேண்டும் என்றால் ரூ1.19 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த விரி உயர்வால் இந்தியாவில் விற்பனையாகும் டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா சிட்டி இ:எச்இவிஆகிய கார்களின் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

Hybrid Road Tax Exemption Withdraw

இதனால் கிராண்ட் விட்டாரா ஹைரைடர்கள் ஆகிய கார்களின் விலை கிட்டத்தட்ட பெட்ரோல், டீசல்கார்களுக்கு இணையாக இரந்த நிலையில் தற்போது இந்த கார்களின் விலை அதிகமாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சாலை வரி என்பது ரூ10 லட்சத்திற்கு அதிகமான விலை கொண்ட காருக்கு 8-10 சதவீரத வம்ரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக சாலை வரி செலுத்த வேண்டும். இதுவடரை இதில் வழங்கப்பட்டு வந்த சலுகை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

நிதி அயோக் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவின் எலெக்ட்ரிக் மொபிலிட்டி இன்டெக்ஸில் அம்மாநிலம் குறைவான வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு இந்த சலுகை முக்கியமான காரணமாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிதி அயோக் குறியீடு என்பது இவி விற்பனை, சார்ஜ்ங் ஸ்டேஷன் வளர்ச்சி, அரசு பாலிசி, உள்ளிட்டவற்றை வைத்து வழங்கப்படும் புள்ளிகள் ஆகும்.

Hybrid Road Tax Exemption Withdraw

இது போக ஹைபிரிட் கார்களுக்கு டில்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் சாலை வரியிலிருந்து முழுமையான விலக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தற்போதும் அமலில் உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் ஸ்டிராங்க் ஹைபிரிட் வாகன விற்பனை சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பாலிசி இருப்பதால் மார்கெட் கண்டிஷன் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. இனி ராஜஸ்தான் மக்கள் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களை வாங்க அதிக பணம் செலவு செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலை உயர்வால் ஏற்படும் இழப்பை தவிர்க்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது டீலர்கள் தரப்பில் வாகன விற்பனையை அதிகரிக்க வழியை பார்க்கும். ஆனால் இந்த வரி சலுகையை தொடர்ந்தால் வாகனங்களின் விற்பனை அதிகமாகும். இதனால் மாசு வெகுவாக குறையும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 5, 2025, 11:00 [IST]
English summary
Hybrid road tax exemption withdrawn india largest state
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X