வாய்ஸ் கண்ட்ரோல் தான் எல்லாமே... இதுக்கு அப்புறம் ஆவது இந்த ஹூண்டாய் காரை யாராவது வாங்குவார்களானு பார்ப்போம்!!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், கிரெட்டா (creta) ஆகும். ஹூண்டாயில் இருந்து மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, கிரெட்டா ஆகும். இதனாலேயே கிரெட்டாவின் 6/7-சீட்டர் வெர்சனாக ஹூண்டாய் அல்கஸார் (Alcazar) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மஹிந்திராவின் ஸ்கார்பியோ (Scorpio) மற்றும் எக்ஸ்யூவி700 (XUV700) கார்களின் ஆதிக்கத்தால், அல்கஸாரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், அல்கஸார் காரின் வேரியண்ட்களின் வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் ஆவது இந்த காரின் விற்பனை சூடுப்பிடிக்குமா என்கிற ஆசையில், அல்கஸாரின் வேரியண்ட்களின் வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் சில மாற்றங்களை செய்துள்ளது. வேரியண்ட்களின் லைன்-அப்பில் ஹூண்டாய் மாற்றங்களை செய்துள்ளது என சொல்வதை காட்டிலும், புதியதாக இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

alcazar variants with advanced features

கிரெட்டாவை போல், அல்கஸார் காரும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டீசல் என்ஜின் உடன் புதியதாக இனி 'கார்ப்பிரேட்' (Corporate) வேரியண்ட்டை வாங்கலாம். இந்த புதிய டீசல் வேரியண்ட்டில் குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof)-ஐ பெறலாம்.

டீசல் என்ஜின் உடன் புதிய கார்ப்பிரேட் வேரியண்ட்டை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். புதிய கார்ப்பிரேட் டீசல் வேரியண்ட் உடன் சேர்த்து, ஏற்கனவே அல்கஸார் காரில் வழங்கப்பட்டு வரும் பிரெஸ்டீஜ் பெட்ரோல் வேரியண்ட்டில் புதியதாக 7-ஸ்பீடு டிசிடி (Dual Clutch Transmission) கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

alcazar variants with advanced features

இதன் மூலமாக, குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் ஆப்ஷனில் அல்கஸார் காரை வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்கள் இரண்டிலும் நேவிகேஷன் உடன் 10.25-இன்ச் எச்டி டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றை பெறலாம்.

இவை மட்டுமின்றி, ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் பிரீமியம் தரத்திலான குவாட்-பீம் டிசைனில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஆர்17 டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களையும் இந்த புதிய வேரியண்ட்களில் பெறலாம். பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் (VSM) உள்ளிட்ட அம்சங்களையும் பெறலாம்.

alcazar variants with advanced features

மேனுவல் கியர்பாக்ஸ் உடன் புதிய கார்ப்பிரேட் டீசல் அல்கஸார் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.86 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.19.28 லட்சம் ஆகும். புதிய அல்கஸார் பிரெஸ்டீஜ் பெட்ரோல் டிசிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.63 லட்சம் ஆகும்.

இந்த புதிய அல்கஸார் கார் வேரியண்ட்களின் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். மேலும், அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய அப்டேட்கள் அனைத்தும் அல்கஸாரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்து இருப்பது ஆகும். குரல் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய பனோராமிக் சன்ரூஃப், பெட்ரோல் வேரியண்ட்டில் புதியதாக டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் போன்றவை பயணிகளின் சவுகரித்தை மேம்படுத்தக்கூடியவை ஆகவும், புதிய வாடிக்கையாளர்களை அல்கஸார் கார் பக்கம் இழுக்கக்கூடியவைகளாகவும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 5:00 [IST]
English summary
Hyundai alcazar gets two new variants with advanced features check price all details here
மேலும்... #hyundai #hyundai alcazar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X