ஹூண்டாய் ஆட்டோவா! கார்களுக்கு இணையான அம்சங்களுடன் வர போகுதா! இத தயாரிக்க யாரு உதவி பண்ணுறாங்க தெரியுமா?

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), மூன்று சக்கர (Three Wheeler) வாகனத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடன் இணைந்தே அது ஆட்டோரிக்சாவை தயார் செய்ய இருக்கின்றது. மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ (Electric Auto Rickshaw)-வையே இவர்கள் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். மூன்று சக்கர வாகனம் மட்டுமல்ல இவர்கள் இருவரும் இணைந்து வர்த்தக பயன்பாட்டிற்கான நான்கு சக்கர வாகனங்களையும் தயாரிக்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே விரைவில் ஹூண்டாய் - டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட இருக்கும் மின்சார மூன்று சக்கர வாகனத்திற்கு பேடண்ட் உரிமம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது.

Hyundai tvs electric micro mobility vehicle patented

இதேபோல், ஹூண்டாய்-ம் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டு உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே இருவரும் தங்களின் வாகன உற்பத்தியில் உள்ள பரந்த திறனை ஒன்றிணைத்து வருங்காலத்திற்கான மின்சாரத்தில் இயங்கும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தயார் செய்ய இருக்கின்றனர்.

இவர்களின் கூட்டணியில் தயாராக இருக்கும் மின்சார மூன்று சக்கர வாகனம் கார்களுக்கு இணையானதாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, இந்த மூன்று சக்கர வாகனத்தின் உட்பக்கம் காருக்குள் அமர்ந்து செல்வதைப் போல அதிகம் பிரீமியமானதாக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

Hyundai tvs electric micro mobility pic

அதேநேரத்தில், இந்த வாகனம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ விபரமும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவது, இந்த வாகனத்தை எப்போது ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணி உற்பத்தி செய்ய தொடங்கும்?, எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் மற்றும் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகளுடன் அது விற்பனைக்கு வரும் என்பது போன்ற எந்தவொரு முக்கிய விபரமும் இந்த வாகனம் பற்றிய வெளியாகவில்லை.

ஏன் இது என்ன பெயரில் விற்பனைக்கு வரும் என்பதும் இதுவரை அறியாத ஓர் தகவலாகவே உள்ளது. விரைவிலேயே இதுகுறித்த அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட இ-ஆட்டோவாகவே இது இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Hyundai tvs e3w concept side design

இதுமட்டுமல்ல, டிஜிட்டல் திரை, செல்போன் இணைப்பு வசதி, கார்களில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற அதிக மிருதுவான இருக்கைகள் மற்றும் ஓர் முழு சார்ஜில் 200 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் திறன் உள்ளிட்டவை இந்த இ-ஆட்டோரிக்சாவில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார் மற்றும் டூ-வீலர்களுக்கு மட்டுமல்ல ஆட்டோ ரிக்சாக்களுக்கும் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டே ஹூண்டாய் மற்றும் டிவிஎஸ் இருவரும் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை தயார் செய்ய இருக்கின்றனர் என யூகிக்கப்படுகின்றது. இந்த வாகனம் அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 1, 2025, 5:00 [IST]
English summary
Hyundai and tvs unveil patented electric micro mobility commercial vehicle in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X