சர்வீஸ் சென்டருக்கு போய்ட்டு தைரியமா சலுகையை கேளுங்க! மொத்த பேரும் ஹூண்டாய் கஸ்டமரா மாற நேரம் வந்தாச்சு!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited) நிறுவனம் புதியதாக 'ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக்' (Hyundai Smart Care Clinic) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் காரை வைத்துள்ள ஒவ்வொருவரும் பயன்படுத்தக் கூடிய இந்த புதிய திட்டத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)க்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹூண்டாய் உள்ளது. இந்த நிலையை ஹூண்டாய் நிறுவனம் அவ்வளவு எளிதாக ஒன்றும் அடைந்துவிடவில்லை. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுகிலும் ஹூண்டாய் கார் ஷோரூம்களும், அவற்றிற்கான சர்வீஸ் மையங்களும் நிறுவப்பட்டு உள்ளன.

இந்த அனைத்து ஹூண்டாய் சர்வீஸ் மையங்களிலும் புதிய ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக் நடத்தப்பட உள்ளது. ஆனால், அதிக நாட்களுக்கு இல்லை; மே 6ஆம் தேதி வரையில் மட்டுமே. இது முழுக்க முழுக்க கஸ்டமர்களை கவர்வதற்கான திட்டம் ஆகும். அதன் மூலமாக தற்போதைய கஸ்டமர்களை தொடர்ந்து ஹூண்டாய் கார் கஸ்டமர்களாக வைத்திருப்பதுடன், புதிய கஸ்டமர்களையும் பெறலாம் என்பதுதான் ஹூண்டாய் நிறுவனத்தின் திட்டமாகும்.
ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக் மூலமாக காரின் என்ஜின் (Engine), பிரேக்குகள் (Brakes), எலக்ட்ரிக்கல் சிஸ்டம் (Electrical System) மற்றும் சஸ்பென்ஷன் (Suspension) உள்பட காரின் சுமார் 70 பகுதிகளை இலவசமாக சரிப்பார்த்து கொள்ளலாம். இவ்வாறு சரிப்பார்த்ததில் காரின் சக்கரங்கள் சரியான திசையில் இல்லையென்றாலோ அல்லது 4 சக்கரங்களும் ஒன்றுக்கொண்டு சரியான பேலன்ஸில் இல்லையென்றாலோ அதனை 15% தள்ளுபடி உடன் சரிச்செய்து கொள்ளலாம்.

சக்கரங்களுக்கு மட்டுமில்லாமல், காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை கூடுதல் அழகாக்கி கொள்வதற்கும், ஏசி சிஸ்டத்தில் கேஸ் நிரப்புக் கொள்ளவும், ஏசி சிஸ்டத்தை சுத்தம் செய்யும் ஸ்பிரேவுக்கும் 15% தள்ளுபடியை பெறலாம். மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு பின் இப்போதுதான் காரை சர்வீஸ் செய்கிறீர்கள் எனில் அதற்கான மெக்கானிக்கல் லேபர் கட்டணத்தில் 15% தள்ளுபடியை பெறலாம்.
காரின் இயந்திர பாகங்களை மாற்றுவதற்கும், ஏசி சிஸ்டத்தில் உள்ள கம்பிரெசர், கண்டென்சர் உள்ளிட்டவற்றிற்கும் 10% தள்ளுபடியை வழங்கக்கூடிய புதிய ஹோண்டா ஸ்மார்ட் கேர் கிளினிக் திட்டத்தின் மூலம் பயணத்தின் போது எந்த நேரத்திலும் தேவைப்படும் ரோடு-சைடு உதவிகளை 10% தள்ளுபடி உடனான கட்டணத்துடன் ஹூண்டாய் கார் ஓனர்கள் பெறலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காருக்கான உத்தரவாதத்தை 30% தள்ளுபடி கட்டணத்துடன் நீட்டித்துக் கொள்ளலாம். ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் 14 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுள் பிரபலமானதாக ஹூண்டாய் கிரெட்டா கார் விளங்குகிறது. சமீபத்தில்தான் கிரெட்டா எலக்ட்ரிக் (Creta Electric) கார் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடைக்காலம் துவங்கிவிட்டதால், காரை சர்வீஸ் செய்வதற்கான நேரம் வந்துவிட்டதாக சமீபத்தில் கூட நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். ஏனெனில், வெயில் காலத்தில் காரில் ஏற்படும் சில பிரச்சனைகள் பெரும் அசவுகரியமாக இருக்கக் கூடும். இதனாலேயே கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே அவற்றை சரிப் பார்த்து சரிச் செய்துக் கொள்ளுவது அவசியமான ஒன்றாகும்.
இதற்காக குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டுமா என நினைப்பவர்களுக்காகவே முக்கியமான புதிய ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக் என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கஸ்டமர்கள் மற்றும் ஹூண்டாய் நிறுவனம் என இருவருக்கும் நன்மை உள்ளது. இவ்வாறான சலுகை திட்டங்களை பயன்படுத்தி அவ்வப்போது தங்களது கார்களை மக்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்பதுதான் ஹூண்டாயின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








