வெறும் ரூ 8 லட்சத்திற்கு ஆட்டோமெட்டிக் கியர் காரா? பெண்கள் எல்லாரும் வரிசையா வாங்க போறாங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா என்ற செடான் காரில் எஸ் ஏஎம்டி வேரியன்ட்டை கூடுதல் அம்சங்களுடன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பல காஸ்ட்லியான கார்களில் இருக்கும் அம்சங்களுடன் இந்த கார் வெறும் ரூ8.07 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? விரிவாக காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் செடான் செக்மெண்டில் ஆரா என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் எஸ் ஏஎம்டி என்ற வேரியன்ட்டை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஏஎம்டி கியர் ஆப்ஷன் உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த வேரியன்ட் டாப் மாடலுக்கும் மேனுவல் கியர் மாடலுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது.

Hyundai Aura S AMT

ஹூண்டாய் ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஏஎம்டி கியர் ஆப்ஷன் உடன் இந்த வேரியன்டில் கிடைக்கிறது மேனுவல் கியர் ஆப்ஷன் உடன் மற்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இந்த காரில் சிஎன்ஜி வெர்ஷனும் இருக்கிறது. இந்த கார் சிஎன்ஜியில் மேனுவல் கியர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் மேனுவல் கியர் பாக்ஸில் 69 பிஎஸ் பவர் மற்றும் 95.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிஎன்ஜியில் தான் அதிக மைலேஜ் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Hyundai Aura S AMT

இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி டே டைம் ரன்னிங் லைட், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், டர்ன் இண்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் ஏஎம்டி தொழிற்நுட்பத்தை அதன் என்ட்ரி லெவல் காரில் வழங்கியிருப்பது இந்த தொழிற்நுட்பத்திற்கு எவ்வளவு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. குறிப்பாக காம்பேக்ட் செக்மெண்டில் பலர் ஆட்டோமெட்டிக் கியர் கார்களை விரும்பிகன்றனர். இதற்கிடையில் மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

1 2 83 114

ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா எஸ் ஏஎம்டி காரை வெறும் ரூ8.07 லட்சம் என்ற விலையில் தான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது அதன் மேனுவல் வேரியன்ட விலையை விட ரூ70 ஆயிரம் மட்டுமே அதிகமாக உள்ளது. இது அதன் போட்டி தயாரிப்புகளான மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களின் ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்ட் கார்களை விட விலை குறைவாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் ஏஎம்டி கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதன் மூலம் மார்கெட்டில் ஆட்டோமெட்டிக் கியர் கார்களுக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. வருங்காலங்களில் ஆட்டோமெட்டிக் கியர் கார்கள் அதிக அளவில் விற்பனையாகும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, July 14, 2025, 16:55 [IST]
English summary
Hyundai aura s amt launched india 2025 price 8 07 lakh
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X