இந்த கார் வந்துவிட்டால் ஹூண்டாயை கையிலேயே புடிக்க முடியாது... டாடாவுக்கு தண்ணி காட்ட போகுது!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்றான நம் இந்தியாவிலும் ஹூண்டாயின் ஆதிக்கம் நன்கு வலுவானதாகவே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் ஹூண்டாய் 2வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பெரும்பாலும், மாருதி சுஸுகிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் ஹூண்டாய் தான் 2வது இடத்தை பிடிப்பது வழக்கம். ஆனால், கடந்த சில வருடங்களின் சில மாதங்களில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் (Tata Motors) 2வது இடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியது.

hyundai cars january sales report

கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் கூட டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடித்து ஹூண்டாய்க்கு ஷாக் கொடுத்திருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனையும் சற்று குறைவாகவே பதிவாகி இருந்தது. ஆனால், ஹூண்டாயின் கார்கள் விற்பனை ஆனது அதனை காட்டிலும் வெகுவாக குறைந்ததால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஆனால், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சுமார் 54 ஆயிரத்து 3 கார்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இது இல்லாமல், 11 ஆயிரத்து 600 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

hyundai cars january sales report

அப்படியென்றால், ஒட்டுமொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் 65 ஆயிரத்து 603 கார்களை ஹூண்டாய் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த மாதத்தில் இந்தியாவில் மட்டும் 54,003 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ள நிலையில், 2024 டிசம்பர் மாதத்தில் வெறும் 42 ஆயிரத்து 208 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சுமார் 57 ஆயிரத்து 115 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் 3,113 கார்களை ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 ஜனவரியில் 10 ஆயிரத்து 500 கார்களை மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்து ஹூண்டாய் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

hyundai cars january sales report

கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார் என்று பார்த்தால், வழக்கம்போல் அது கிரெட்டா (Creta) ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 522 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதத்தில்தான் கிரெட்டா எலக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா எலக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு முன்னதாகவே ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனை ஆனது வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் கார்கள் விற்பனை சற்று குறைந்திருப்பினும், ஹூண்டாய் அதற்கு பெரியதாக கவலைப்படாது. ஏனெனில், டிசம்பரை காட்டிலும் ஜனவரியில் சுமார் 11,800 கார்களை அதிகமாக ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 23:29 [IST]
English summary
Hyundai car sales report 2025 january domestic sales and exports
மேலும்... #hyundai #hyundai creta #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X