ஒரே காரை வைத்து பிஸ்னஸை ஓட்டும் வெளிநாட்டு கார் நிறுவனம்! மாதத்திற்கு மாதம் சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமான இது இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சில மாத விற்பனையில் 2வது இடத்தில் இருந்து ஹூண்டாய் சறுக்கலை காண்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாயை மஹிந்திரா (Mahindra) முந்தி ஆச்சிரியப்படுத்தி இருந்தது. வழக்கமாக 4வது இடத்தை பிடிக்கக்கூடிய மஹிந்திரா பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் என இரு நிறுவனங்களையும் முந்தி 2வது இடத்தை பிடித்தது.

ஹூண்டாய் 3வது இடத்திலா என்கிற அளவிற்கு ஆச்சிரியமாக இருந்தது. ஆனால், கடந்த 2025 ஏப்ரல் மாத விற்பனையில் இன்னும் ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்திற்கு ஹூண்டாய் சறுக்கி உள்ளது. கடந்த மார்ச் மாத கார்கள் விற்பனையில் மீண்டும் 2வது இடத்தை தனதாக்கிய ஹூண்டாய் நிறுவனம், ஏப்ரல் மாத விற்பனையில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

hyundai cars model wise sales

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 374 ஆகும். அதுவே, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 50 ஆயிரத்து 201 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது 11.61%, அதாவது 5 ஆயிரத்து 827 யூனிட்கள் குறைந்துள்ளது.

அதேபோல், கடந்த மார்ச் மாதத்திலும் 51 ஆயிரத்து 820 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் ஹூண்டாய் கார்கள் விற்பனை 14.37% குறைந்துள்ளது. 14 சதவீதத்திற்கும் மேல் விற்பனை குறைவு என்பது ஹூண்டாய் நிறுவனம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

hyundai cars model wise sales

வழக்கம்போல், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை கிரெட்டா (Creta) பிடித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் கிரெட்டா இவி எலக்ட்ரிக் கார் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கிரெட்டா கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால், கிரெட்டா கார்களின் விற்பனை மட்டுமே அதிகரித்து வருவது இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரச்சனை ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரெட்டாவை தவிர்த்து, மற்றவை அனைத்தின் விற்பனை எண்ணிக்கைகளும் வழக்கத்தை காட்டிலும் குறைந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 16 ஆகும்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 15 ஆயிரத்து 447 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 10.16%, அதாவது 1,569 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் 18 ஆயிரத்து 59 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதன்படி பார்க்கும்போது, மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் கிரெட்டா கார்கள் விற்பனை 5.78% குறைந்துள்ளது. கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தில் வென்யூ (Venue) உள்ளது என சொன்னாலும், விற்பனை எண்ணிக்கையில் கிரெட்டாவுக்கும், வென்யூவுக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. கிரெட்டாவின் பாதி எண்ணிக்கையிலான வென்யூ கார்கள் கூட கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட வென்யூ கார்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 953 ஆகும். ஆனால், 2024 ஏப்ரலில் 9 ஆயிரத்து 120 வென்யூ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், வென்யூ கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்து 167 யூனிட்கள் குறைந்துள்ளது. இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக 10 ஆயிரத்து 441 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த ஆண்டிலேயே மார்ச்சை காட்டிலும் ஏப்ரலில் வென்யூ கார்கள் விற்பனை 2 ஆயிரத்து 488 யூனிட்கள் குறைந்துள்ளது. வென்யூவுக்கு அடுத்து 3வது இடத்தில் அளவில் சிறிய ஹூண்டாய் காரான எக்ஸ்டர் (Exter) 5 ஆயிரத்து 416 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 ஏப்ரலில் 7,756 எக்ஸ்டர் கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த 2024 ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் 2 ஆயிரத்து 340 எக்ஸ்டர் கார்களை ஹூண்டாய் குறைவாக விற்பனை செய்துள்ளது. அதேபோல், கடந்த மார்ச் மாதத்திலும் 5,416ஐ காட்டிலும் 485 எக்ஸ்டர் கார்கள் அதிகமாக 5 ஆயிரத்து 901 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து இந்த வரிசையில் 4வது இடத்தில் ஹூண்டாயின் செடான் ரக காரான அவ்ரா (Aura) உள்ளது.

2024 ஏப்ரலில் 4 ஆயிரத்து 526 அவ்ரா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 4 ஆயிரத்து 224 அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 மார்ச் மாதத்தில் அவ்ரா கார்களின் விற்பனை எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருந்தது. அவ்ராவுக்கு அடுத்து அதிகம் விற்கப்பட்ட 5வது ஹூண்டாய் காராக ஐ10 நியோஸ் (i10 NIOS) உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐ10 நியோஸ் கார்களின் எண்ணிக்கை 4,137 ஆகும். ஆனால், 2024 ஏப்ரலில் 5 ஆயிரத்து 117 ஐ10 நியோஸ் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. கடந்த மார்ச் மாதத்திலும் கூட கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதற்கடுத்து 6வது இடத்தில் 3 ஆயிரத்து 525 யூனிட்கள் விற்பனை உடன் ஐ20 (i20) கார் உள்ளது. 2024 ஏப்ரலில் 5 ஆயிரத்து 199 ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 7வது மற்றும் 8வது இடங்களில் அல்கஸார் (Alcazar) மற்றும் வெர்னா (Verna) கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,017 மற்றும் 1,005 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 65 டக்ஸன் கார்களையும், 16 ஐயோனிக் 5 கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. கிரெட்டாவில் எலக்ட்ரிக் வெர்சன் மட்டும் அறிமுகம் செய்யப்படவில்லை என்றால், ஹூண்டாய் கார்கள் விற்பனை இன்னும் அதாள பாதாளத்திற்கு சென்றிருக்கும். இந்த விற்பனை சரிவை சமாளிக்க துரிதமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹூண்டாய் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 18, 2025, 21:28 [IST]
English summary
Hyundai cars model wise sales report of april 2025
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+