ஹூண்டாய் பார்த்து பார்த்து உருவாக்கிய கார் கை கொடுக்கல... ஷோரூமுக்கு வரவங்க கண்ணு மொத்தமும் இந்த கார் மீதுதான்
ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி கார் நிறுவனம். மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயை கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் மஹிந்திரா முந்தி வருகிறது. நடந்து முடிந்த கடந்த 2025 ஜூன் மாதத்திலும் தான். சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூட ஹூண்டாயை கார்கள் விற்பனையில் முந்தியுள்ளது.
இந்த அளவிற்கு நிலையற்றதாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த ஜூன் மாதத்திலும் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதனை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளதால், ஹூண்டாய் தொடர்ந்து 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இருப்பினும், ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது வழக்கத்தை காட்டிலும் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் ஹூண்டாய் கார்கள் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 50 ஆயிரத்து 103 கார்களை விற்பனை செய்திருந்த ஹூண்டாய் நிறுவனம், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 44 ஆயிரத்து 24 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
இந்த வகையில் பார்க்கும்போது, ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 12.1% குறைந்துள்ளது. இந்த ஜூன் மாதத்திலாவது பரவாயில்லை, கடந்த 2025 மே மாதத்தில் இன்னும் குறைவாக 43 ஆயிரத்து 861 கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது.

2024 ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைந்திருப்பதற்கு காரணம், ஹூண்டாய் வென்யூ (Venue), எக்ஸ்டர் (Exter) போன்ற அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹூண்டாய் கார்களின் விற்பனை குறைந்து இருப்பதினால் ஆகும். வழக்கம்போல், கடந்த ஜூன் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக முதலிடத்தில் கிரெட்டா (Creta) உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 786 ஆகும். அதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 16 ஆயிரத்து 293 கிரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கிரெட்டா கார்கள் விற்பனை ஆனது 3% குறைந்துள்ளது.

கிரெட்டாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக வென்யூ 2வது இடத்தை பிடித்து இருப்பினும், ஏற்கனவே கூறியதுபோல் வென்யூ கார்கள் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 890 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2025 ஜூனில் 6 ஆயிரத்து 858 வென்யூ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வென்யூ காருக்கு அடுத்து அதிக விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக 3வது இடத்தை பிடித்து இருக்கும் எக்ஸ்டரின் விற்பனையும் சரிவை கண்டுள்ளது. கடந்த மாதத்தில் 5,873 எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் முறையே 5,413 மற்றும் 4,237 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமில்லாமல், 3,785 ஐ20 கார்கள், 1,174 அல்கஸார் கார்கள், 813 வெர்னா கார்கள், 73 டக்ஸன் கார்கள் மற்றும் 12 ஐயோனிக் 5 எலக்ட்ரிக் கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் கார்கள் விற்பனை குறைந்திருப்பதற்கு காரணம், ஏற்கனவே கூறியதுபோல் வென்யூ மற்றும் எக்ஸ்டர் கார்களின் விற்பனை குறைவு ஆகும். இவை மட்டுமின்றி மற்ற ஹூண்டாய் கார்களின் விற்பனையும் கணிசமாக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









