அதுக்குள்ள 10 வருஷம் ஓடிடுச்சா... மிடில்-கிளாஸ் மக்களின் ஃபேவரட் காராக எல்லார் மனதிலும் இடம் பிடிச்சிடுச்சு!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், கிரெட்டா (Creta) ஆகும். இந்தியாவில், நன்கு உயரமான, நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க காரணமாக இருக்கும் கார்களுள் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்றாகும்.

இந்தியாவில் கிரெட்டா கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிவிட்டதாம்; நாட்கள் போனதே தெரியவில்லை. இந்திய மார்க்கெட்டில் கிரெட்டாவின் 10 வருடங்களை கொண்டாடும் விதமாக புதியதாக மூன்று கிரெட்டா கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. அவையாவன, கிரெட்டா கிங் (King), கிங் நைட் (Knight) மற்றும் கிங் லிமிடெட் எடிசன் (Limited Edition) என்பன ஆகும்.

hyundai celebrates 10 years of creta

அதேநேரம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கிரெட்டாவின் மற்ற வேரியண்ட்களிலும் சில புதிய வசதிகளை வழங்கியுள்ளது. புதிய கிரெட்டா கிங் கார்கள் மூன்றும் முழுவதும் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக, பிரத்யேகமாக கருப்பு நிற தீம் (Theme)-ஐ ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வழங்கி உள்ளது.

இந்த மூன்று கிரெட்டா கிங் கார்களில் முதலில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிரெட்டா கிங் காரை பற்றி பார்ப்போம். விலை குறைவான கிரெட்டா கிங் கார் என சொன்னாலும், ஏற்கனவே விற்பனையில் இருந்த மற்ற கிரெட்டா கார் வேரியண்ட்களை காட்டிலும் விலைமிக்கதாக இது விளங்குகிறது. கிரெட்டா காரில் வழங்கப்பட்டுவரும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் புதிய கிரெட்டா கிங் கிடைக்கும்.

hyundai celebrates 10 years of creta

இவை மட்டுமின்றி, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கிரெட்டா கிங் கிடைக்கும். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஆனது கிரெட்டா என் லைன் (Creta N Line) காரில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. சாதாரணமான கிரெட்டா கார்கள் எதிலிலும் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், புதிய கிரெட்டா கிங் காரை 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் உடன் வாங்கலாம்.

ஆனால், கிரெட்டா கிங் காரில் இந்த டர்போ என்ஜினை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். கிரெட்டா என் லைன் காரை போன்று மேனுவல் ஆப்ஷனில் கிடைக்காது. கிரெட்டா கிங் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.17,88,500இல் இருந்து ரூ.20,61,100 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

hyundai celebrates 10 years of creta

வழக்கமான கிரெட்டா கார்கள் உடன் ஒப்பிடுகையில், புதிய கிரெட்டா கிங் காரில் ஆர்18 டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், தேவைக்கேற்ப மடக்கும் வசதி உடன் மெமரி ஃபங்க்சனை கொண்ட டிரைவர் சீட், 8 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய பயணிகள் இருக்கை, டேஷ்போர்டு கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வசதி, ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டட் டெம்ரெச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை கூடுதலாக பெறலாம்.

இதற்கடுத்துள்ள கிரெட்டா கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் கார்களை பொறுத்தவரையில், இவை நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும். டர்போ என்ஜின் ஆப்ஷனில் கிடைக்காது. அதேபோல், கிரெட்டா கிங் நைட் மற்றும் கிங் லிமிடெட் எடிசன் கார்களை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வரலாறு மிக நீண்டது ஆகும். மிடில்-கிளாஸ் மக்கள் பலரது முதல் காராக கிரெட்டா விளங்குகிறது. அதுவும் குறிப்பாக, இளம் வயதிலேயே தனது முதல் காரை வாங்க நினைக்கும் இளம் தலைமுறையினரின் முதல் சாய்ஸ் ஹூண்டாய் கிரெட்டா ஆகும். இத்தகைய கார் 10 வருடங்களை கடந்து இன்னும் பல வருடங்களுக்கு புது புது பரிணாம வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 2, 2025, 19:33 [IST]
English summary
Hyundai celebrates 10 years of creta in indian market launches new editions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X