நிறைய பேரு பிறந்துட்டாங்க இருந்தும் இந்த காரை அடிக்க முடியல! சேல்ஸில் பட்டைய கிளப்பிட்டு இருக்கு இந்த கார்!
இந்த காரை அடிச்சுக்க புதுசா ஒரு காரு பொறந்துதான் வரனும்னு சொன்ன காலம் மாறி, நிறைய பேரு (புது காரு) பிறந்து வந்துட்டாங்க, ஆனா இந்த கார அடிக்க முடியல என சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றது ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கிரெட்டா (Creta) கார் மாடல். இந்திய எஸ்யூவி (SUV) கார் மார்கெட்டின் தலைவனாகவே இந்த கார் மாடல் மாறிவிட்டது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் விற்பனையில் மற்ற எஸ்யூவி கார்களால் எட்ட முடியாத உயரத்தையே கிரெட்டா அடைந்திருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. சென்ற நிதியாண்டின் இறுதி காலாண்டில் மட்டும் 52,898 யூனிட்டுகள் வரை கிரெட்டா விற்பனையாகி இருக்கின்றது. அதேநேரம் சென்ற மார்ச் மாதத்தில் மட்டும் 18,059 யூனிட்டுகள் கிரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

சில நிறுவனங்களின் மொத்த விற்பனைகூட இந்த எண்ணிக்கையை தொடவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இந்திய எஸ்யூவி கார் மார்கெட்டின் தலைவனாக இது கருதப்படுகின்றது. கிரெட்டா, ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த பிரிவிலேயே கிரெட்டா விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் மாடல் கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand), டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser Hyryder), ஹோண்டா எலிவேட் (Honda Elevate), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார் மாடல்களுக்கே கிரெட்டா போட்டியாக உள்ளது.

இவற்றைவிடவே அது அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்த காருக்கு போட்டியளிக்கும் விதமாக சந்தையில் உள்ள அனைத்து கார்களும் விற்பனையில் பின் தங்கியே இருக்கின்றன. கிரெட்டா சென்ற நிதியாண்டு காலாண்டு மற்றும் மார்ச் மாதத்தில் மட்டுமல்ல மொத்த நிதியாண்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலேயே விற்பனையாகி இருக்கின்றது.
1,94,871 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிக விற்பனை ஆகும். மேலும், மிக அதிக எண்ணிக்கையில் இந்த கார் விற்பனையாகிக் கொண்டிருப்பதால் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை அது பிடித்திருக்கின்றது.
இந்தியாவில் ஐசிஇ (ICE) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) என இரண்டு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மின்சார வெர்ஷன் சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், கிரெட்டா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ. 17.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான கிரெட்டா ரூ. 11.10 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த இரண்டு வெர்ஷன்களிலும் பிரீமியம் அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டா ஓர் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக உள்ளது. பணக்காரர்கள் தொடங்கி நடுத்தர வர்க்க மக்கள் வரை என பலரும் இந்த காரை மிகுந்த ஆவலுடன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே இப்போது அது விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








