இந்த எஸ்யூவிகளில் 3இல் ஒருவர் இந்த ஹூண்டாய் காரை தான் வாங்குகிறார்! 2வது இடத்தில் டொயோட்டா கார்

இந்தியாவின் 4.2 முதல் 4.4 மீட்டர் நீளமுள்ள எஸ்யூவி கார்கள் (SUV Cars) சந்தையில், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்கள், கடந்த 2025 செப்டம்பரில் ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பண்டிகைக் கால விற்பனை மற்றும் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) வரி குறைப்புகளின் சாதகமான தாக்கமே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த எஸ்யூவி கார்களின் விற்பனை சற்று சரிவைச் சந்தித்துள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் எலக்ட்ரிக் வாகன (EV) மாடல் உட்பட, ஹூண்டாய் கிரெட்டா இந்த பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த இந்திய கார்கள் விற்பனையில் டாடா நெக்ஸான் சப்-காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் மாருதி சுஸுகி டிசையர் செடான் கார்களுக்கு அடுத்தபடியாக, கிரெட்டா மூன்றாவது இடத்தில் உள்ளது.

above 4 meter suv cars sales report

இந்த 4.2மீ- 4.4மீ எஸ்யூவி கார்கள் பிரிவில் மொத்தம் 50,351 கார்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இது 2024 செப்டம்பரில் விற்பனையான 51,684 கார்களுடன் ஒப்பிடுகையில் 2.58% சரிவாகும். எனினும், 2025 ஆகஸ்ட்டில் விற்பனையான 42,835 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாத விற்பனை 17.55% அதிகரித்து, பண்டிகைக் காலத்தின் உத்வேகத்தை உறுதிப்படுத்துகிறது.

4.2 முதல் 4.4 மீட்டர் நீளமுள்ள எஸ்யூவி கார்கள் பிரிவில், ஹூண்டாய் கிரெட்டா/இவி 18,861 யூனிட்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது 2024 செப்டம்பரை விட விற்பனையில் 18.61% மற்றும் 2025 ஆகஸ்ட்டை விட 18.44% வளர்ச்சி ஆகும். சந்தையில் 37.46% பங்கைப் பெற்று, கிரெட்டா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.

above 4 meter suv cars sales report

கிரெட்டா இவி எலெக்ட்ரிக் கார், அதன் கூடுதல் ரேஞ்ச் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், மின்சார எஸ்யூவி கார்கள் சந்தையில் ஹூண்டாயின் நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் கிரெட்டாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில், டொயோட்டா ஹைரைடர் 2024 செப்டம்பரை விட 41.28% விற்பனை வளர்ச்சி விகிதத்துடன் கடந்த மாதத்தில் சிறப்பாக விற்பனையாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 5,385 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் 7,608 கார்கள் விற்கப்பட்டு உள்ளன. இருப்பினும் மாதாந்திர விற்பனை, ஆகஸ்ட் மாதத்தின் 9,100 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 16.40% குறைந்துள்ளது. கியா செல்டோஸ் 5,816 யூனிட்களுடன் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

above 4 meter suv cars sales report

இது கடந்த ஆண்டு செப்டம்பரை விட 16.42% சரிவைக் கண்டாலும், 2025 ஆகஸ்ட்டை விட 24.09% அதிகரித்துள்ளது. மாருதி கிராண்ட் விட்டாரா 5,698 யூனிட்கள் விற்கப்பட்டு நான்காம் இடத்தில் உள்ளது. இதன் விற்பனை 2024 செப்டம்பரை விட 44.50% குறைந்தாலும், 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 0.78% மட்டுமே சரிந்துள்ளது.

மாருதியின் புதிய விக்டோரிஸ் மாடல், முதல் மாத விற்பனையில் 4,261 யூனிட்களுடன் வலுவான அறிமுகத்தைப் பதிவு செய்துள்ளது. ஹோண்டா எலிவேட் 2,199 யூனிட்களுடன் நிலையான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது 2024 செப்டம்பரை காட்டிலும் விற்பனையில் 12.19% வளர்ச்சியையும், 2025 ஆகஸ்ட் மாதத்தை விட 32.47% வளர்ச்சியையும் கண்டுள்ளது. ஹோண்டா நிறுவனம், எலிவேட் ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

above 4 meter suv cars sales report

இதற்கடுத்து 7வது இடத்தில் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் கார் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 1,701 பிஇ6 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 8வது இடத்தில் 1,566 யூனிட்கள் விற்பனை உடன் டாடா கர்வ்/இவி உள்ளது. கடைசி 9வது மற்றும் 10வது இடங்களில் ஒரே ஃபிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (1,114) மற்றும் ஸ்கோடா குஷாக் (769) கார்கள் உள்ளன.

No SUVs (4.2m - 4.4m)
Sales
Sep-25 Diff Growth % YoY Share % Sep 25
Sep-25 Sep-24
1 Hyundai Creta / EV 18,861 15,902 2,959 18.61 37.46
2 Toyota HyRyder 7,608 5,385 2,223 41.28 15.11
3 Kia Seltos 5,816 6,959 -1,143 -16.42 11.55
4 Maruti Grand Vitara 5,698 10,267 -4,569 -44.50 11.32
5 Maruti Victoris 4,261 0 4,261 8.46
6 Honda Elevate 2,199 1,960 239 12.19 4.37
7 Mahindra BE 6 1,701 0 1,701 3.38
8 Tata Curvv / EV 1,566 4,763 -3,197 -67.12 3.11
9 Volkswagen Taigun 1,114 1,611 -497 -30.85 2.21
10 Skoda Kushaq 769 1,767 -998 -56.48 1.53
11 MG ZS EV 250 980 -730 -74.49 0.50
12 Citroen Basalt 210 341 -131 -38.42 0.42
13 XUV400 EV 149 948 -799 -84.28 0.30
14 MG Astor 90 760 -670 -88.16 0.18
15 Citroen C3 Aircross 59 41 18 43.90 0.12
Total 50,351 51,684 -1,333 -2.58 100.00

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான மார்க்கெட் இருப்பதால், மக்கள் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த 4.2- 4.4 மீட்டர் நீளம் கொண்ட கார்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கார் ஹூண்டாய் கிரெட்டா என்றால் அது மிகையில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, October 26, 2025, 5:00 [IST]
English summary
Hyundai creta as usual first in above 4 meter suv cars sales report of september 2025
மேலும்... #suv car #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X