ஏரியாவுக்கு ஒருத்தரிடம் ஆவது இந்த காரை பார்க்க முடியும்! 10 வருஷத்தில் மொத்தமா மாறி போச்சு!
கிரெட்டா (Creta), ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக விற்பனையாகி வரும் எஸ்யூவி (SUV) ரக காராக ஹூண்டாய் கிரெட்டா விளங்குகிறது. இந்த நிலையில், கிரெட்டா கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ளன.
இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் அதன் கிரெட்டா எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. 4.1 மீட்டரில் இருந்து 4.3 மீட்டர் வரையில் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் பிரிவில் கிரெட்டா சந்தைப்படுத்தப்பட்டது. இதனை காட்டிலும் பெரிய அளவிலான எஸ்யூவி கார்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன; அதேநேரம் சிறிய அளவிலான எஸ்யூவி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த அளவிற்கு கணக்கச்சிதமான காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்குவதினாலேயே கடந்த 10 வருடங்களில் ஹூண்டாய் கிரெட்டா கார் இந்திய மக்களின் நம்பிக்கைக்கு உரிய காராக உருவெடுத்து நிற்கிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் கிரெட்டாவில் கொண்டுவரப்பட்ட அப்கிரேட் அதன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஆகும்.
2020ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலுக்கும் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், கிரெட்டாவின் விற்பனை குறைவில்லாமல் இருந்தது. 2015இல் மூர்க்கத்தனமான டிசைனில், அதிக தொழிற்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா கார், 2020இல் எல்லாரும் விரும்பக்கூடிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டதுடன், எல்லாராலும் வாங்கக்கூடிய விலையில் கொண்டுவரப்பட்டது.

கிரெட்டாவுக்கு போட்டியாக, பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது காம்பெக்ட் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்த போதிலும், கிரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், கிரெட்டாவுக்கு விற்பனையில் போட்டி அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2015இல் அறிமுகம் செய்யப்பட்ட போது ஹூண்டாய் கிரெட்டாவுக்கு அந்த சமயத்தில் போட்டியாக மூன்றே மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருந்தன.
ஆனால், இப்போது சுமார் 14 கார் மாடல்கள் கிரெட்டாவுக்கு போட்டியாக உள்ளன. இருப்பினும், இப்போதும் கிரெட்டா அதன் பிரிவில் கோலோச்சி விளங்குவதுதான் இதில் சிறப்பாகும். இதற்கு அதன் விற்பனை எண்ணிக்கைகள் தான் சாட்சியாகும். இந்தியாவில் கிரெட்டாவின் முதலாம் ஆண்டு விற்பனை எண்ணிக்கைக்கும், கடந்த 1 வருடத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால், கிரெட்டாவின் விற்பனை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூர்மையான ஸ்டைலான தோற்றத்துடன், லெவல்-2 அடாஸ் (ADAS), பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) மற்றும் சில புதிய என்ஜின் ஆப்ஷன்கள் உடன் கிரெட்டா அப்கிரேட் செய்யப்பட்டது. இவ்வாறான தொடர்ச்சியான அப்கிரேட்கள் மூலமாக, இந்தியாவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கடந்த 10 வருடங்களில் கிரெட்டா கார்களை வாங்கி உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 வருடத்தில் 12 லட்ச வாடிக்கையாளர்கள் என்றால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் வாங்குகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக மாதத்திற்கு 15 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால், இந்தியாவில் 20 லட்சம் கிரெட்டா கார்கள் விற்பனை மைல்கல்லை எட்ட ஹூண்டாய்க்கு நீண்ட காலம் ஆகாது.
Source: NDTV Auto (https://www.ndtv.com/auto)


Click it and Unblock the Notifications









