நாடே எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்த எலக்ட்ரிக் கார் ஓட்ட எப்படி இருக்கு? ரிவியூ வீடியோ!!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பிரபலமான கிரெட்டா (Creta) காரை எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதால், ஹூண்டாய் நிறுவனமும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், ஹூண்டாய்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கார்கள் சந்தையிலும் முக்கியமான எலக்ட்ரிக் காராக கிரெட்டா எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனாலேயே இந்த கார் மீது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். நெரிசல் மிகுந்த நகர்புற சாலை மற்றும் நெடுஞ்சாலை என ஓட்டிப் பார்க்கப்பட்டதில் இந்த எலக்ட்ரிக் காரில் பல்வேறு விஷயங்கள் எங்களை கவர்ந்தன. அவற்றை பற்றி விரிவாக கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டில்தான் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரை அறிமுகம் செய்தது. அதன் அடிப்படையில்தான் புதிய கிரெட்டா எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சற்று உன்னிப்பாக கவனித்தால், கிரெட்டா எலக்ட்ரிக் காரில் கொண்டுவரப்பட்டுள்ள சிறு, சிறு மாற்றங்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது.

hyundai creta electric review video

அதேபோல், காருக்கு உள்ளேயும் கேபின் பெரிய அளவில் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை தான் ஒத்து காணப்படுகிறது என்றாலும், எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் வகையில் நீல நிற ஹைலைட்கள் காருக்குள் வழங்கப்பட்டுள்ளன. 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிரெட்டா எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2025, 11:56 [IST]
English summary
Hyundai creta electric car test drive review video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+