அஜித், விஜய் படத்தை போல பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது..
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த கார் மாடல்களில் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric)-ம் ஒன்றாகும். இந்த காரின் டெலிவரி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு காரை ஹூண்டாய் நிறுவனம் டெலிவரி கொடுக்கும் வீடியோ மற்றும் படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ரூ. 17.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை மிக அதிகமாக இருக்கின்றதே என தப்புக் கணக்கு போட வேண்டாம். விலைக்கு ஏற்ப அதிக அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது இந்த ஹூண்டாய் நிறுவனம். மேலும், இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடலே கிரெட்டா.

இந்த கார் மாடலில் மின்சார வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது கிரெட்டா கார் காதலர்களின் கவனத்தை கூடுதலாக வளைத்துப் போடும் விதமாக அமைந்திருக்கின்றது. மேலும், இதன் ஐசிஇ வெர்ஷனைப் போலவே எலெக்ட்ரிக் வெர்ஷனும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விற்பனையில் செழிப்பான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கேற்ப கிரெட்டா எலெக்ட்ரிக் காரில் பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக 10.25 அங்குல அளவில் இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதும், புதிய ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டு இருப்பதும் மற்றும் அடாஸ் அட்வான்ஸ்டு அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதுமட்டுமல்ல, முன் பக்கத்தில் பவர்டு மற்றும் வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற அம்சங்களும் கிரெட்டா எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இவை பயணத்தை சுவராஷ்யமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற உதவும்.
தொடர்ந்து, காரில் மின்சாரத்தை மின்சாதன பொருட்களுக்குப் பெற்றும் வசதியும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இந்த அம்சங்கள் அனைத்தும் புதிய வாடிக்கையாளர்களின் கவனத்தை கூடுதலாக கவரும் விதமாக உள்ளது. தொடர்ந்து, 42 kWh மற்றும் 51.4 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகள் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.
இதில் முதல் ஓர் முழு சார்ஜில் 390 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று 473 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 135 பிஎஸ் திறன் கொண்ட மோட்டார் சிறிய பேட்டரி பேக் தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும்.
அதேவேளையில், 171 பிஎஸ் திறன் கொண்ட மோட்டார் பெரிய பேட்டரி பேக் தேர்விலும் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரி டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக வைத்து சார்ஜ் செய்கையில் வெறும் 58 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிரெட்டாவின் ஐசிஇ வெர்ஷனுக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை போலவே இரட்டிப்பான வரவேற்பே இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், சந்தையில் விண்ட்ஸர் இவி, நெக்ஸான் இவி எனும் மிக முரட்டுத் தனமான போட்டியாளர்கள் உள்ளனர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








