பொங்கலுக்கு கால்ல விழுந்து காசு வாங்குனதும் நேர இந்த இவியை வாங்க வந்துடுங்க! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் காரின் புகைபடங்கள் மற்றும் பிராண்ட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதன் விலை 2025ம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வெளியிடப்படும். ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வுவில் வாகனத்தை நேரடியாகப் பார்வையிடவும் வாய்ப்பளிக்கும். எலெக்ட்ரிக் எடிசன் அதன் பெட்ரோல் எடிசனின் வடிவமைப்பை பிரதிபலிக்கிறது வசதி மற்றும் பாதுகாப்புக்காக ஏராளமான அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
கிரெட்டாவின் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் எடிசன்கள் இரண்டும் இரண்டு 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்களை கொண்டுள்ளன - ஒன்று மல்டிமீடியாவுக்காகவும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோலுக்காகவும் உள்ளது. மல்டிமீடியா அமைப்பு வயர்டு ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்கிறது. கிரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு ஒரு தனித்துவமான கூடுதல் இந்த அமைப்பாக இன் கார் பேமெண்ட் சிஸ்டம் உள்ளது. இதன் மூலம் EV சார்ஜிங்கிற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

கிரெட்டாவின் இரண்டு எடிசன்களிலும் ஒரு பாரோமிக் சன்ரூஃப் நிலையான அம்சமாக உள்ளது. இது சரியாக பயன்படுத்தப்படும்போது கேபின் சூழலை மேம்படுத்துகிறது. குளிர்விக்கப்பட்ட முன்பக்க சீட்டுகள் வழக்கமான மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது. இது வெப்பமான அல்லது ஈரப்பதமான நிலைமைகளில் வசதியை உறுதி செய்கின்றன. டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டிரைவர் மற்றும் முன் பயணியருக்கு தனிப்பட்ட கிளைமேட் சிஸ்டம் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது, வசதி மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்துகிறது.
கிரெட்டா எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது, இதில் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது வேரியன்டை பொருட்படுத்தாமல் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. அனைத்து வேரியன்ட்களலும் இ்நத ஆப்ஷன் உள்ளது. கூடுதலாக, பிளைட் ஸ்பாட்டை மானிட்டர் செய்யக்கூடிய 360-டிகிரி கேமரா அமைப்பு குறுகலான இடங்களில் பார்க்கிங் செய்வதற்கு உதவுகிறது.

கிரெட்டா எலெக்ட்ரிக் காரில் லெவல்-2 ADAS அம்சங்கள் உள்ளன. இது அதன் பெட்ரோல் வெர்ஷனில் 2024 ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டபோது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், முன் பக்க மோதல் தடுப்பு உதவி, பிளைட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் லேன் டிபார்ச்சர் அலர்ட் ஆகியவை உள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) எந்த டயர் அழுத்த ஒழுங்கின்மைக்கும் ரியல் டைம் அலர்ட்களை வழங்குகிறது.
எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் மாடல்களில் 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது. இதில் சிறந்த ஒலி தரத்திற்கான சென்டர் ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர் ஆகியவை உள்ளது மற்றும் தொடர்ச்சியான மியூசிக் அனுபவத்திற்க்காக JioSaavn மியூசிக் ஸ்ட்ரீமிங்கை சப்போர்ட் செய்கிறது. அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வாகனத்தின் நிறுத்தும் பவரை மேம்படுத்துகின்றன. இது ஆட்டோ-ஹோல்டு செயல்பாட்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) மூலம் செயல்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 135 PS பவர் மோட்டாருடன் இணைந்த 42 kWh பேட்ட, ARAI-இன் கூற்றுப்படி 390 கிமீ ரேஞ்ச் தரும் மற்றும் 171 PS பவர் மோட்டாருடன் இணைந்த 51.4 kWh பேட்டரி பேக், ARAI-இன் கூற்றுப்படி 473 கிமீ ரேஞ்சை தரும். இந்த கார் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டாடா கர்வ் EV, MG ZS EV, மாருதி e-விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் இந்த SUV வெளியிடப்படுவது அதன் வேரியன்ட்கள் மற்றும் விலை விவரங்களைப் பற்றி மேலும் தெளிவுபடுத்தும். அதன் பிறகு இந்த காருக்கான விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். எஸ்யூவி உலகில் கிரெட்டா எப்படி ஒரு புரட்சியை செய்ததோ அதே போல எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாயப்புள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு பலரை கவர்ந்துள்ளது. விலை குறைவாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டாவின் இந்த எலெக்ட்ரிக் வெர்ஷன் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









