ரொம்ப நாளெல்லாம் காத்திருக்க வேண்டாம்.. இப்பவே புக்கிங் தொடங்கிருச்சு.. நாடே எதிர்பார்த்த காராச்சே இது!!

இந்தியாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) இருக்கின்றது. இந்த காரையே இன்றைய தினம் (ஜனவரி 2) ஹூண்டாய் வெளியீடு செய்தது. இந்த காரை முழுமையாக ஹூண்டாய் வெளியீடு செய்வது இதுவே முதல் முறையாகும். விரைவில் இந்த காரை பொதுப் பார்வைக்கு கொண்டு வரவும் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. வருகின்ற 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) 2025 வாயிலாகவே இந்த காரை இந்தியாவில் காட்சிப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த நிலையிலேயே புத்தாண்டு பரிசாக யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இன்றைய தினம் கிரெட்டா இவி-யை ஹூண்டாய் வெளியீடு செய்தது. மேலும், வெளியீட்டைத் தொடர்ந்து இப்போதே இந்த காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக, உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களை வெளியீடு செய்த பின்னர் சில நாட்களுக்கு பின்னரே புக்கிங் பணிகளைத் தொடங்கும்.

Hyundai creta ev bookings now open

உதாரணமாக, கியா (Kia) நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரோஸ் (Syros) கார் மாடலை சென்ற ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வெளியீடு செய்தது. ஆனால், இந்த காருக்கான புக்கிங் பணிகள் 03 ஜனவரி 2025, இரவு 12.00 மணி அளவிலேயே தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

ஆனால், இதுபோன்ற எந்தவொரு அலட்டலும் இல்லாமல் ஹூண்டாய் கிரெட்டா இவி-க்கான புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. இது இந்திய மின்சார கார் பிரியர்களை கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. கிரெட்டா இவி-யின் வருகை எம்ஜி (MG) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதாவது, கிரெட்டா இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) ஆகிய இரண்டிற்கும் போட்டியாக அமையும். இத்தகைய எலெக்ட்ரிக் காருக்கே புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், டீலர்கள் அளவிலேயே புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்தே இந்த பணியில் டீலர்கள் களமிறங்கி உள்ளனர். ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் அவர்கள் முன்பதிவைச் செய்து வருகின்றனர். அதேவேளையில், குறிப்பிட்ட சில டீலர்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனம் தற்போது விருப்பமுள்ள வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்களை மட்டுமே அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வாயிலாக ஏற்று வருகின்றது.

விரைவில், அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் ஆஃப்-லைன் வாயிலாகவும் புக்கிங் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் கிரெட்டா ஓர் முழு சார்ஜில் 460 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும். இதேபோல், சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் மிக சிறந்த காராக கிரெட்டா இவி காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், குரலுக்கு கட்டுப்படும் வசதிக் கொண்ட பனோரமிக் சன்ரூஃப், பன்முக டிரைவிங் மோட்கள், வெண்டிலேட் வசதிக் கொணட் இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களையே இந்த கார் தாங்கி இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, தனக்குள் இருக்கும் மின்சாரத்தை மற்ற வாகனங்களுக்கு வழங்கும் திறன், டிஜிட்டல் சாவி, 10.25 அங்குல திரை இரண்டு மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்டவற்றையும் கிரெட்டா இவி-யில் காண முடியும். இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கிரெட்டா இவி கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா ஐசிஇ வெர்ஷனைப் போலவே அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியதாக கிரெட்டா இவி-யும் இருக்கும் என்பது தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இதன் விலையும் மிகக் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ரூ. 10 லட்சம் என்கிற விலையில் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 2, 2025, 23:27 [IST]
English summary
Hyundai creta ev bookings now open in india more details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+