டாடா, எம்ஜி கொஞ்சம் ஓரமா போங்க.. நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் கிரெட்டா இவி.. இந்த நாளுக்கே எல்லாரும் வெயிட்டிங்

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரெட்டா இவி (Creta EV) கார் மாடலை நாளை (ஜனவரி 17) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவி-யை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இந்த கார் மாடலில் மின்சார வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது.

நாளை தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாகவே இந்த காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. நான்கு விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்சிகியூட்டீவ், ஸ்மார்ட், பிரீமியம் மற்றும் எக்ஸ்செல்லன்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

Hyundai creta ev

இன்னும் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவியின் விலைகளை அறிவிக்கப்படவில்லை. நாளை தினம் இதன் விலைகளை ஹூண்டாய் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், பலரின் கவனம் நாளை தொடங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ-வின் பக்கம் திரும்பி இருக்கின்றது. இந்த வாகன கண்காட்சியில் ஹூண்டாய் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி பிராண்டுகள் கலந்துக் கொண்டு தங்களின் புதிய வாகனங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றன.

அந்தவகையிலேயே இந்த உலக அரங்கை கிரெட்டா இவி-யும் அலங்கரிக்க இருக்கின்றது. இதில், யாரும் எதிர்பார்த்திராத அம்சங்கள் பல இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இரண்டு டிஜிட்டல் திரை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை போன்றவை வழங்கப்பட இருக்கின்றன.

இதுதவிர, ஆறு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டு மற்றும் லெவல் 2 வகை அடாஸ் (ADAS) அம்சம் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பேட்டரி பேக்கைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக் ஆகியவையே அவை ஆகும். இவை ஓர் முழு சார்ஜில் 390 கிமீ மற்றும் 473 கிமீ ரேஞ்சை தரும்.

மோட்டாரை பொருத்த வரை 135 பிஎஸ் மற்றும் 171 பிஎஸ் திறன் கொண்ட மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இந்த மோட்டார் ஆப்ஷன், பேட்டரி பேக் ஆப்ஷன் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்காகவே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிரெட்டா இவி-க்கு ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான விலையே நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதைவிட குறைவான விலை இந்த காருக்கு நிர்ணயித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சந்தையில் தற்போது மின்சார கார் பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.

களத்தில் புதிய வீரர்களாக மஹிந்திரா பிஇ6 உள்ளிட்ட கார் மாடல்களும் களமிறங்கி இருக்கின்றன. இதுதவிர, ஏற்கனவே கர்வ் இவி மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி உள்ளிட்ட கார் மாடல்களும் போட்டி களத்தில் வீரர்களாக இருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் சிறந்த போட்டியாளனாக கிரெட்டா இவி-யின் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நாட்டின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றான கிரெட்டா-வில் மின்சார வெர்ஷனைக் கொண்டு வந்து இந்திய மின்சார கார் பிரியர்களை வளைத்துப் போடும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 16, 2025, 10:50 [IST]
English summary
Hyundai creta ev launching tomorrow in india via bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+