கிரெட்டா எலெக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகம்.. பேய் மாதிரி சேல்ஸ் ஆக போகுது! டாடா தலைல துண்டு விழாம பாத்துக்கோங்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியர்களின் பிரியமான கார் மாடலாக கிரெட்டா ஐசிஇ வெர்ஷன் உள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது இந்திய கார் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே இந்த காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்சிகியூட்டீவ் (Executive), ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் ஓ (Smart O) மற்றும் பிரீமியம் (Premium) ஆகியவையே அவை ஆகும். இதில் எக்சிகியூட்டீவ்-வே ஆரம்ப நிலை தேர்வு ஆகும். இதற்கு ரூ. 17.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Hyundai creta ev launched at inr 17 99 lakh

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 19.99 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. கிரெட்டா ஐசிஇ வெர்ஷனைப் போலவே இதுவும் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், ஷிஃப்ட் பை வயர் அம்சம், டிஜிட்டல் சாவி (செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சையே சாவியாக பயன்படுத்தலாம்), இரண்டு டிஜிட்டல் திரை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை போன்ற அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டு மற்றும் லெவல் 2 வகை அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவியில் வழங்கி இருக்கின்றது.

பேட்டரி பேக்கை பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 42 kWh மற்றும் 51.4 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 390 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று 473 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

கிரெட்டா இவி-யை வீட்டிலும் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதற்காக 11 kW திறன் கொண்ட சார்ஜிங் கருவியை ஹூண்டாய் வழங்குகின்றது. இது பயன்படுத்துகையில் 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீத சார்ஜை ஏற்ற 4 மணி நேரங்கள் வரை தேவைப்படும்.

அதேநேரத்தில், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charge) பாயிண்டை பயன்படுத்தினால் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்ற 58 நிமிடங்களே போதுமானது. இந்த காரில் ஏற்றப்படும் சார்ஜை வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை இயக்கவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதிக்கு Vehicle to Load என்கிற ஓர் பெயருண்டு.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது முக்கிய போட்டியாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எம்ஜி மற்றும் டாடா மோட்டார்ஸ்க்கு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியை வழங்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எலெக்ட்ரிக்-கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 16:23 [IST]
English summary
Hyundai creta ev has officially launched at a price of inr 17 99 lakh boasting cutting edge tech
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+