பைக் மாதிரி மைலேஜ் தரப்போகும் கிரெட்டா கார்! புதுசா என்ன வரப்போகுது தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் புதிய தலைமுறை அப்டேட்டை வரும் 2027ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்துடன் அதிக மைலேஜ் தரும் காராக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் மக்கள் மத்தயில் பிரசித்தி பெற்ற மாடலாக உள்ளது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த காரை அடுத்த தலைமுறை வெர்ஷனை வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு தான் இந்த காரில் மிகப்பெரிய அப்டேட்களை செய்து புதிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டது.

தற்போது வாடிக்கையாளர்கள் மார்கெட்டில் ஹூண்டாயின் கிரெட்டா காரை தான் அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த காரை உயிப்புடன் வைத்திருக்க அடுத்த தலைமுறை அப்டேட்டைகொண்டு வர திட்டமிட்டுள்ளது.
வரும்2027ம் ஆண்டு இதன் புதிய தலைமுறை கார் விற்பனைக்காக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஒரு ஆப்ஷனாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் மாசு கட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து அதே நேரம் காற்ற மாசுவையும் குறைக்க இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இதற்கிடையில் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை காரா விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக புதிய 3 வரிசை சீட்டர் கொண்ட காரா உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
தற்போது ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காரின் அடுத்த தலை முறை காரை எஸ்எக்ஸ் 3 என்ற கோடு பெயரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த காரில் அடிப்படையிலிருந்தே மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சின்ன சின்ன மாற்றங்களை மட்டுமே செய்யும் என பலர் எதிர்பார்த்த நிலையில் முழுமையாக மாற்றம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தான் இந்நிறுவனம் அடுத்த கிரெட்டா காரையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விற்பனையி் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா காரிலேயே ஏகப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய தொழிற்நுட்பங்கள் எல்லாம் இருக்கின்றன. புதிய தலைமுறை காரில் உட்புறத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்-கார் கனெக்டெட் தொழிற்நுட்பம், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது உள்ள மாடலில் பெட்ரோல், டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அடுத்த தலைமுறை அப்டேட்டில் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் கூடுதல் ஆப்ஷனாக இடம் பெறலாம். இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் பொருத்தப்பட்ட தொழிற்நுட்பமாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த கார் பைக் மாதிரி
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கும் நிலையில் இதன் அடுத்த தலைமுறை கார் குறித்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு 2 ஆண்டுகள் காலம் இருந்தாலும் தற்போதே பலர் இதை எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









