இந்த ஹூண்டாய் காரில் அப்படி என்ன இருக்கு? பலா பழத்தில் ஈ மொய்க்கிற மாதிரி கஸ்டமர்கள் வந்துட்டே இருக்காங்க
இந்தியா உள்பட ஒரு நேரத்தில் உலகம் முழுக்கவே செடான் (Sedan) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், சமீப காலமாக எஸ்யூவி (SUV) கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாகவே புது, புது எஸ்யூவி கார்கள் தொடர்ச்சியாக பல்வேறு கார் நிறுவனங்களில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இதன் விளைவாக, தற்போது அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் குறைந்தது ஒரு எஸ்யூவி காராவது விற்பனை செய்யப்படுகிறது.
இப்போதும் இந்தியாவில் மக்கள் அதிகம் பேர் வாங்கும் கார்களாக ஹேட்ச்பேக் கார்கள் தான் உள்ளன என்றாலும், அதேநேரம் எஸ்யூவி கார்களுக்கும் தொடர்ந்து கஸ்டமர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தொகுப்பில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எஸ்யூவி கார்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

5. டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா மோட்டார்ஸின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார். கடந்த சில வருடங்களாகவே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நெக்ஸான், சில மாதங்களில் அதிக பேரால் வாங்கப்பட்ட எஸ்யூவி காராகவும் விளங்கி உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 397 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
4. மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio): விற்பனையில் இதுவரையில் இல்லாத உச்சத்தை ஸ்கார்பியோ தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 442 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 டிசம்பரை காட்டிலும் 7% அதிகமாகும். ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

3. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara): மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த மாருதி கார். கடந்த மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட எஸ்யூவி கார்கள் லிஸ்ட்டில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 15 ஆயிரத்து 784 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.
2. டாடா பஞ்ச் (Tata Punch): பெட்ரோல் என்ஜின், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என 3 விதமான ஃபுயுல் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் பஞ்ச் ஆனது டாடா மோட்டார்ஸில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் காராக விளங்குகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 16 ஆயிரத்து 231 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

1. ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): கடந்த மாதத்தில் சுமார் 54 ஆயிரம் கார்களை விற்பனை செய்திருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து 18 ஆயிரத்து 522 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹூண்டாயின் சிறந்த விற்பனை காராகவும், தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராகவும் கிரெட்டா விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆரம்பத்தில் இருந்து ஹூண்டாய் கிரெட்டாவுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கிரெட்டா எலக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. அதேநேரம், டாடா பஞ்ச் காரின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications









