எவ்வளவு கனவோடு இந்தியா வந்திருப்பாங்க! சிட்ரோன் என்கிற கார் கம்பெனி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

எஸ்யூவி கார்கள் (SUV Cars) உலகம் முழுவதும் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் ஆகும். 4.1 மீட்டர்களில் இருந்து 4.4 மீட்டர்களுக்கு இடைப்பட்ட நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் 'காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்' என அழைக்கப்படுகின்றன. இத்தகைய எஸ்யூவி கார்கள் கிட்டத்தட்ட அனைத்து கார் பிராண்ட்களில் இருந்தும் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார் மாடல்களையும், அவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகளையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் தற்போதைக்கு 13 விதமான காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எம்ஜி மோட்டார் மற்றும் சிட்ரோன் நிறுவனங்களில் இருந்து இரு காம்பெக்ட் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த 13 காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் சில எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-களும் அடங்குகின்றன.

creta most sold compact suv

மொத்தமாக, நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் 54 ஆயிரத்து 407 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜனவரி மாதத்தில் வெறும் 47 ஆயிரத்து 819 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 6,588 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் வெறும் 42 ஆயிரத்து 458 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக முதலிடத்தில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளது.

creta most sold compact suv

கடந்த மாதத்தில் மொத்தம் 18 ஆயிரத்து 522 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஜனவரியில் 13,212 கிரெட்டா கார்களும், டிசம்பரில் 12,608 கிரெட்டா கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் கிரெட்டாவுக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா உள்ளது.

அதுவே, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கிரெட்டாவை முந்தி கிராண்ட் விட்டாரா முதலிடத்தை பிடித்திருந்தது. நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 784 கிராண்ட் விட்டாரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 3வது இடத்தில் கியா செல்டோஸ் 6,470 யூனிட்கள் விற்பனை உடனும், 4வது இடத்தில் டொயோட்டா ஹைரைடர் 4,941 யூனிட்கள் விற்பனை உடனும் உள்ளன.

creta most sold compact suv

இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே டாடா கர்வ் மற்றும் ஹோண்டா எலிவேட் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,087 மற்றும் 1,773 ஆகும். 7 முதல் 10வது இடங்கள் வரையில் முறையே ஃபோக்ஸ்வேகன் டைகுன் (1,548), ஸ்கோடா குஷாக் (1,371), மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (288) மற்றும் எம்ஜி இசட்.எஸ் இவி (265) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை இல்லாமல் கடந்த ஜனவரி மாதத்தில் 190 எம்ஜி அஸ்டர் கார்கள், 107 சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார்கள் மற்றும் 61 சிட்ரோன் பசால்ட் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் கிரெட்டா எலக்ட்ரிக் கார் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் ஹூண்டாய் கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 23:59 [IST]
English summary
Hyundai creta most sold compact suv car of india in january 2025
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X