ஹூண்டாய் காருக்கு டஃப் கொடுக்க சரியான எஸ்யூவி கார்! மொத்தமா மறைச்சிக்கிட்டு போனா மட்டும் விட்ருவோமா!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு இந்தியாவில் பெரிய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 2ஆம் தலைமுறை கிரெட்டா கார் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகிறது. கிரெட்டாவை மிகவும் சிறிய அளவிலான எஸ்யூவி (SUV) கார் என சொல்லிவிட முடியாது. போதுமான அளவில் பெரியதான மிட்-சைஸ் (Mid-size) எஸ்யூவி கார் கிரெட்டா ஆகும்.

இந்தியாவின் நம்பர் ஒன் மிட்-சைஸ் எஸ்யூவி காரான ஹூண்டாய் கிரெட்டாவை விற்பனையில் முந்த மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்பட பல முன்னணி கார் நிறுவனங்கள் முயற்சி செய்துள்ளன. அந்த வகையில், நிசான் (Nissan) நிறுவனமும் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் மூலம் கிரெட்டாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள உள்ளது.

nissan mid-size suv car spotted

இதனை உறுதிப்படுத்தும் வகையில், நிசானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அனூப் ரவீந்திரன் என்பவரது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தின் வாயிலாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள அந்த படங்களில் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் இந்த புதிய ஜப்பானிய-ஸ்டைல் எஸ்யூவி காரை காணலாம்.

இந்தியாவில் நிசானின் இந்த புதிய எஸ்யூவி கார் காட்சி தருவது இதுவே முதல்முறை ஆகும். கிரெட்டாவுக்கு போட்டியாக ஏற்கனவே ரெனால்ட் (Renault) நிறுவனம் டஸ்டர் (Duster) என்கிற மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. ரெனால்ட்டும், நிசானும் கூட்டணியில் உள்ளன. டஸ்டர் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், குறைந்தது அந்த அளவிற்காவது தனது மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனை ஆகாதா என்பதுதான் நிசானின் எதிர்பார்ப்பாக உள்ளது.

nissan mid-size suv car spotted

இந்த புதிய நிசான் கார் இந்த சோதனை ஓட்டத்தில் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் இருப்பினும், காரின் பிளாஸ்டிக் வீல் ஆர்ச்சுகள், 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள், நிமிர்ந்த முன்பக்க பொனெட், மத்தியில் நிசான் பேட்ஜ் உடன் பொருத்தமான டிசைனில் கிரில் பகுதியை காண முடிகிறது. மேலும், C-வடிவிலான எலிமெண்ட்களையும் காரின் முன்பக்க பம்பரில் மறைப்புகளை தாண்டி காண முடிகிறது.

காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, நிமிர்ந்த தோற்றத்தில் பின்பக்க கதவு உள்ளிட்டவற்றை காண முடிகிறது. பின்பக்கத்தில் டெயில்லைட்கள் செவ்வக வடிவில் உள்ளன. இந்த புதிய நிசான் எஸ்யூவி காரின் உட்புறம் எப்படி இருக்கும் என்பது தற்போதைக்கு நமக்கு எதுவும் தெரியவில்லை.

விற்பனையில் உள்ள ரெனால்ட் டஸ்டர் காரை ஒத்ததாகவே இந்த புதிய நிசான் எஸ்யூவி கார் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல், என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த இரு நிசான் & ரெனால்ட் கார்களில் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். இந்த புதிய நிசான் எஸ்யூவி காரை அடுத்தடுத்த வருடங்களில் ஹைப்ரீட் (Hybrid) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களிலும் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டாவை விற்பனையில் முந்த இது போன்று பல கார் கம்பெனிகள் தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகின்றன. ஆனால், எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை என்பதுதான் உண்மை. நிசானின் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆவது ஹூண்டாய் கிரெட்டாவை முந்துகிறதா என பார்ப்போம். தற்போது சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும், இந்த புதிய நிசான் காரின் அறிமுகத்தை இன்னும் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகே எதிர்பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 5:00 [IST]
English summary
Hyundai creta rival new nissan mid size suv spotted first time in india
மேலும்... #nissan #suv car #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+