7 மாதத்தில் 1.17 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?
2025ம் ஆண்டு துவங்கிய பிறகு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இருக்கிறது. இந்த கார் கடந்த 7 மாதத்தில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இவ்வளவு அதிகமாக விற்பனையாகும் அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சமீப காலமாக பயணிகள் வாகனங்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. குறிப்பாக எஸ்யூவி ரக கார்கள் அதிகம் விற்பனையாகிறது. இந்நிலையில் 2025ம் ஆண்டு துவங்கியது முதல் இதுவரை விற்பனையான கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 7 மாதத்தில் மொத்தம் 1,17,458 கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் அதிகம் விற்பனையாகும் நிலையில் இந்த கார் அதில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தற்போது விற்பனையாகி வரும் புதிய தலைமுறை கிரெட்டா காரில் பல்வேறு அப்டேட்கள், மற்றும் புதி அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் இ்நத காரின் வெளிப்புறத்திலும் அப்டேட்கள் பெறப்பட்டன. இந்த காரின் இன்ஜினில் மாற்றங்கள் இல்லை மொத்தம் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. அதன்படி 1.5லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல், 1.5 லிட சிஆர்டிஐ டீசல் 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இதன் கியர்பாக்ஸ்களை பொரத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் மக்கள் மத்தியில் பிரபலமான காராக மாறி வருகிறது.
ஹூண்டாய் கிரெட்டா கம்பஷன் இன்ஜின் காரை பொருத்தவரை ரூ11.1 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியன்டும், ரூ20.50 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட்களும் விற்பனையாகி வருகிறது. கிரெட்டா எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை ரூ17.99 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியன்டும், ரூ24.38 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்டும் விற்பனையாகி வருகிறது.

கிரெட்டா இவி காரை பொருத்தவரை 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 51.4kWh பேட்டரி ஆப்ஷனில் 473 கி.மீ ரேஞ்சும், 42kWh பேட்டரி ஆப்ஷனில் 390 கி.மீ ரேஞ்சும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.9 நொடியில் பிக்கப் செய்து வருகிறது. இந்த காரில் 11kW ஏசி சார்ஜரை பயன்டுத்தி சார்ஜ் செய்யும் போது 10-80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏற 4 மணி நேரம் எடுத்துக்கொள்ளும், டிசி ஃபாஸ்ட் சார்ஜரில் 58 நிமிடங்களில் சார்ஜ் ஏறி விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இந்தியாவில் பிரபலமான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரை மக்கள் விரும்பி வாங்க இந்த காரின் வடிவமைப்பு, வசதிகள், அம்சங்கள், விலை என பல காரணங்கள் இருக்கிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









