தினம் 526 பேர் இந்த காரை வாங்கியிருக்காங்க! அப்படி இந்த கார்ல என்னதாங்க இருக்குது?

ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா எஸ்யூவி காரை கடந்த ஜூன்மாதம் விற்பனை செய்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் பயணிகள் காராக மாற்றியுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி கடந்த மாதத்துடன் சரியாக 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த மகுடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாக தனது கிரெட்டா காரை இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியது அப்பொழுதே இந்த கார் மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. சிறப்பாக விற்பனையும் நடந்தது. இந்நிலையில் இந்த கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஜூன் மாதமும் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனமாக இந்த கார் தான் மாறியுள்ளது.

Hyundai Creta Sales June 2025

கடந்த ஜூன் மாதம் மொத்தம் 15786 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்த இடத்தை பிடித்துள்ளது. இது மட்டுமேல்ல கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாத விற்பனையை பார்க்கும் போது ஹூண்டாய் கிரெட்டா தான் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பது இந்த காருக்கு ஒன்றும் புதிதல்ல கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த கார் தான் சிறப்பாக விற்பனையானது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் வெற்றியை தொடர்ந்து இதில் பல்வேறு ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் சமீபத்தில் தான் விற்பனைக்கு அறிமுகமானது. அதே நேரம் அதிக ஃபெர்பார்மென்ஸை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு என்-லைன் வேரியன்டில் 1.5லி டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் விற்பனையாகி வருகிறது.

Hyundai Creta Sales June 2025

ஹூண்டாய் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ11.11 லட்சம் முதல் ரூ20.34 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டீசல் வேரியன்ட் காரை பொருத்தவரை ரூ12.69 லட்சம் முதல் ரூ 20.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. என் லைன் வேரியன்ட்களின் விலையை பெருத்தவரை ரூ16.93 லட்சம் முதல் ரூ20.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. கிரெட்டா இவி காரை பொருத்தவரை ரூ17.99 லட்சம் முதல் ரூ24.38 லட்ம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனமே ஏற்கனவே புதிய தலைமுறை கிரெட்டா காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் 2027ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்காக அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த கார் எஸ்எக்ஸ்3 என்ற கோடு பெயரில் தற்போது டெவலப் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார் எதிர்காலத்திற்கு ஏற்ற ஏகப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம்.

Hyundai Creta Sales June 2025

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் மக்கள் மத்தியில் ஹிட்டாவதற்கு இந்த கார் மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கியதற்கு முக்கியமான காரணம் இந்த காரை மக்கள் விரும்பும் வகையில் அந்நிறுவனம் உருவாக்கியது தான். இந்த கார் மக்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்திய போதே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 30 நாளில் 15786 கார்களை விற்பனை செய்துள்ளது. அப்படி பார்த்தால் தினம் 526 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 10:45 [IST]
English summary
Hyundai creta sales june 2025 highest selling car in india
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X