மாருதி, டாடா வயிற்றில் புளியை கரைத்த ஹூண்டாய் கார்! வெறும் 30 நாள்ல இத்தன பேர் வாங்கீட்டாங்களா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
கார்வாலே தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 18,861 க்ரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் ஹூண்டாய் க்ரெட்டா காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும்.

அதாவது ஹூண்டாய் க்ரெட்டா கார் கடந்த 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில்தான், ஹூண்டாய் க்ரெட்டா கார் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 10 ஆண்டுகளில், இதற்கு முன்பாக வேறு எந்தவொரு மாதத்திலும் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டது கிடையாது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.73 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

அத்துடன் இது ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதவிர எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் ஹூண்டாய் க்ரெட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.02 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.
எனவே இதன் ஐசி இன்ஜின் வெர்ஷன், இந்திய சந்தையில், கியா செல்டோஸ், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்கள் உடன் போட்டியிட்டு வருகிறது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷன், டாடா கர்வ் இவி, மஹிந்திரா பிஇ 6 மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் தற்போது க்ரெட்டா காரின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அனேகமாக ஹூண்டாய் க்ரெட்டா காரின் புதிய தலைமுறை மாடல், வரும் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த புதிய தலைமுறை மாடலில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே புதிய தலைமுறை மாடலின் வருகைக்கு பின்னர், ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை, இன்னும் பல்வேறு புதிய உச்சங்களை எட்டும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








