மாருதியின் அடி மடியிலேயே கை வைக்கும் ஹூண்டாய்... மைலேஜை வாரி வழங்கும் காரை களத்தில் இறக்க போறாங்க...

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹைப்ரிட் கார்களுக்கான (Hybrid Cars) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை அதிக மைலேஜ் (Mileage) வழங்குவதுதான், இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. விற்பனை சிறப்பாக இருப்பதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய ஹைப்ரிட் கார்களை களமிறக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இதில், ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்றாகும். ஹூண்டாய் நிறுவனம் கூடிய விரைவில் க்ரெட்டா (Hyundai Creta) காரில் புதிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை வழங்கவுள்ளது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும்.

Hyundai Creta

தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரில், 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இவற்றுடன், நான்காவதாக ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் இணையவுள்ளது.

அனேகமாக அது 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருவது க்ரெட்டா காரின் 2வது தலைமுறை மாடல் ஆகும். இதன் 3வது தலைமுறை மாடலை உருவாக்குவதற்கான பணிகளை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

Maruti Suzuki Grand Vitara

அனேகமாக 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் 3வது தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் ஹூண்டாய் க்ரெட்டா காரில் புதிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹைப்ரிட் இன்ஜின், அதிக மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த தகவல் தற்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா காரின் புதிய ஹைப்ரிட் மாடலின் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை இன்னும் கடுமையாக்கலாம்.

மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸ் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு எல்லாம், புதிய ஹூண்டாய் க்ரெட்டா ஹைப்ரிட் மாடலின் வருகை, நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாக கூடிய கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. இந்த சூழலில் வரவுள்ள அதன் புதிய ஹைப்ரிட் மாடல், ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்யவுள்ள அதே நேரத்தில், க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் மாடலும், 2027ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 28, 2025, 23:05 [IST]
English summary
Hyundai creta to get hybrid engine option in 2027 check all details here
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+