ரூ1 லட்சம் வரை மிச்சம் பண்ணலாம்! ஹூண்டாய் டிசம்பர் டிலைட் ஆஃபர் பத்தி தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் இந்த டிசம்பர் மாதத்திற்கான தள்ளுபடைியை அறிவித்துள்ளது. இதன்படி இந்த மாதம் கார் வாங்குபவர்கள் குறிப்பிட்ட மாடலை தேர்வு செய்தால் ரூ1 லட்சம் வரை பணத்தை மிச்சம் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் வருட கடைசி என்பதால் பலர் வாகனம் வாங்குவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் "டிசம்பர் டிலைட்" என்ற பெயரில் தங்கள் வாடிக்கையாளர்களுக்க புதிய ஆஃபர்களை அறிவித்துளு்ளது. இதனால் இந்த மாதம் விற்பனையை அதிகரிக்கவும், மார்கெட்டில் தங்கள் பங்கை அதிரிக்கவும் திட்டமிட்டுள்ளது. பலர் புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஆகியவற்றை முன்னிட்டு கார் வாங்கும் மன நிலையில் இருப்பார்கள் என்பதால் இந்த ஆஃபர்களை அறிவித்துள்ளது.

இதற்காக விளம்பரங்களையும் அ்ந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் வாங்கும் போது விலை குறைப்பு பலன்கள் மட்டும் அல்லாமல் சில கூடுதல் பலயன்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படிதனது 6 மாடல் கார்களுக்கு இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு மாடலுக்கம் எவ்வளவு பலன்கள் கிடைக்கிறது என்பதை காணலாம்.
ஹூண்டாய் ஐ10 நியோஸ் காருக்கு ஜிஎஸ்டி குறைப்பின் மூலம் ரூ73808 குறைந்துள்ளுது. இது போக தற்போது கூடுதலாக ரூ70,000 சேர்த்து மொத்தம் ரூ1,43,808 பலனாக பெற முடியும். ஐ20 காரின் விலை ஜிஎஸ்டி குறைப்பால் ரூ98,053 குறைந்துள்ளது. இது போக கூடுதல் ரூ70,000 பலன் சேர்த்தால் ரூ1,68,053 மொத்த பலன் கிடைக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு ரூ89,209 ஜிஎஸ்டியால் விலை குறைந்துள்ளது. இது போக கூடுதலாக ரூ85,000 பலன் சேர்த்து ரூ1,74,209 பலன் பெற முடியும்.

அடுத்தாக ஹூண்டாய் ஆரா காரை பொருத்தவரை ரூ 78,465 ஜிஎஸ்டியால் விலை குறைந்துள்ளது. இது போக ரூ33,000 கூடுதல் பலன்கள் சேர்த்தால் மொத்தம் ரூ1,11,465 மொத்த பலன் கிடைக்கும். வெர்னா காரை பொருத்தவரை ரூ60,640 ஜிஎஸ்டியால் விலை குறைந்துள்ளது. கூடுதலாகரூ75,000 பலன் சேர்த்து மொத்தம் ரூ1,35,640 மொத்த பலன் பெறலாம்.
ஹூண்டாய் அல்கஸார் காருக்கு ஜிஎஸ்டியால் ரூ75,376 விலை குறைந்துள்ளதுோ. இதற்கு கூடுதலாக ரூ40,000 பலன் சேர்த்து ரூ1,15,375 பலன் பெற முடியும். இது எல்லாம் ஹூண்டாய் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் தான்.இந்த பலன்கள் எப்படியான பலன்கள், நேரடி பண பலன்கள் எவ்வளவு, மாறாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், கார்பரேட் தள்ளுபடிகள், இதர பேக்கேஜ்களுக்கான ஆஃபர்கள் எவ்வளவு என்ற விபரங்களை நீங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் டீலரிடம் நேரடியாக சென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூணண்டாய் கார்களக்கு தனி மதிப்பு இருக்கிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட நல்ல தள்ளுபடிகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உங்களுக்கான சரியான தள்ளுபடியை அருகில் உள்ள அதிகாரப்பூர்வமான டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 2026ம் புத்தாண்டை ஹூண்டாய் காருடன் கொண்டாடுங்கள்.


Click it and Unblock the Notifications









