டாடாவை கதற விட வரும் விலை குறைவான ஹூண்டாய் கார்! மார்க்கெட்டை மொத்தமா வளச்சு போட போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த சூழலில், எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிசைன் (Design) மாற்றங்கள் மட்டும் செய்யப்பட போவதில்லை. கூடவே சேர்த்து, பல்வேறு புதிய வசதிகளும் (Features) வழங்கப்படவுள்ளன.

இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல், ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வசதியை பெறவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இது கூகுள் (Google) நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆபரேட்டிங் சிஸ்டம் (AAOS - Android Auto Operating System) அம்சத்தையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் கொண்டிருக்கும் முதல் மாஸ் மார்க்கெட் கார் என்ற பெருமையை ஹூண்டாய் எக்ஸ்டர் பெறும். ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ட்யூயல் ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்படவுள்ளது. இதில் ஒரு ஸ்க்ரீன், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும்.

மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக இயங்கும். இதில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் அளவு 12.9 இன்ச் ஆகவும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் அளவு 9.9 இன்ச் ஆகவும் இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்/சிஎன்ஜி இன்ஜின்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள்தான், தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில், சிஎன்ஜி இன்ஜின் தற்போதைய நிலையில் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதே அளவிலான மைலேஜ் (Mileage), ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை 5.68 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 9.61 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படலாம். இருப்பினும் இது விலை குறைவான எஸ்யூவி கார்களில் ஒன்று என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








