வெறும் ரூ7.98 லட்சம் தான்! காஸ்ட்லி கார்ல இருக்குற எல்லாமே இதுலயும் இருக்குது!
ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் காரில் புரோ பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டைட்டன் கிரே மேட் பெயிண்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ் கேம் அம்சத்துடன் இருக்கும் வெர்ஷன் பல்வேறு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான விரபங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தனது மைக்ரோ எஸ்யூவி காரான எக்ஸ்டர் காரில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான பதிய புரோ பேக் வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. இந்த அப்டேட்டில் சிறிய காஸ்மெட்டிக்ஸ் மேம்பாடு, எக்ஸ்க்ளூசிவான கலர் ஆப்ஷன்கள், கூடுதல் அம்சங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு இந்த பண்டிகை கால விற்பனை போட்டிக்குதயாராகியுள்ளது.

இந்த கார் மக்கள் மத்தியில் ஒரளவிற்கு நம்பிக்கையை பெற்றுள்ள நிலையில் இ்நத காரின் புரோ பேக்கில் டைட்டன் கிரே மேட் பெயிண்ட் ஃபினிஷ் செய்யப்பட்டு பிரிமியம் அம்சங்களுடன் 5 சீட்டர் ஆப்ஷன் உடன் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய கலர் ஷேடில் வீல் ஆர்ச் கிளாடிங், சைடு சில் ஆகிய பகுதிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது இந்த காருக்க மஸ்குலரான லுக்கை கொடுக்கிறது.
இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார் 10க்கும் மேற்பட்ட கலர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த காரில் அட்லஸ் ஒயிட், ஃபெயர்ரி ரெட், ரேஞ்சர் காக்கி, ஸ்டாரி நைட், ரேஞ்சர் காக்கி மற்றும் அப்யாஸ் பிளாக், அட்லெஸ் ஒயிட் மற்றும் அப்யாஸ் பிளாக், காஸ்மிக் ப்ளூ மற்றும் அப்யாஸ் பிளாக், காஸ்மிக் ப்ளூ, அப்யாஸ் பிளாக், ஷாடோ கிரே, ஷாடோகிரே மற்றும் அப்யாஸ் பிளாக், உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் பல வேரியன்ட்களில் ஏற்கனவே டேஷ்கேம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இது மற்ற வேரியன்ட்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் புரோ பேக் விலை விபரங்கள் வெளியாகியுள்ளது. ரூ7.98 லட்சம் முதல் இந்த வேரியன்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் எஸ்+ மேனுவல் வேரியன்டிற்கு மேல் உள்ள அனைத்து வேரியன்ட்களும் புரோ பேக் வேரியன்ட்களாக கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 82 பிஎச்பி பவரையும், 113.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தறின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் விற்பனையை அதிகரிக்க பல்வேறு யுக்திகளை கையில் எடுக்கும். பண்டிகை கால தள்ளுபடிகளை வழங்குவது, கார்களில் அப்டேட்களை கொண்டு வருவது, புதிய மாடல்களை களம் இறக்குவது உள்ளிட்ட யுக்திகளை செய்யும். அதன் ஒரு பாகமாக தான் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலத்தில் பலர் புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். அவர்களுக்க நவீன அப்டேட் செய்யப்பட்ட கார்கள் மீது அதிகம் ஈர்ப்பு இருக்கும் என்ற காரணத்திற்காக இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









