27 கிமீ மைலேஜ் காரை இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்களா! ஹூண்டாய்க்கு கோயிலே கட்டி கும்பிடலாம்!
இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சில கார்களுக்கு சரியாக அமையவில்லை. இதில், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஒன்றாகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களில் ஒன்று. டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டி மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்ந்து வருகிறது. இது இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருக்கிறது.
இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,416 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 7,756 ஆக இருந்தது. இது 30 சதவீத வீழ்ச்சி ஆகும். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும், ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.
அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 5,901 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 5,416 ஆக குறைந்துள்ளது. இது 8.22 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல்/மேனுவல் கியர் பாக்ஸ், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல்/ஏஎம்டி கியர் பாக்ஸ் மற்றும் 1.2 லிட்டர் Bi-fuel கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி/மேனுவல் என மொத்தம் 3 விதமான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதில் அதிகபட்ச மைலேஜ் (Mileage) வழங்க கூடியது சிஎன்ஜி இன்ஜின் ஆகும். இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான மைலேஜ் மட்டுமல்லாது, ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) ஹூண்டாய் எக்ஸ்டர் கொண்டுள்ளது.
இதில், ப்ளூலிங்க் உடன் 8 இன்ச் ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், பேடில் ஷிஃப்டர்கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வசதிகள் எல்லாம் வேரியண்ட்களை பொறுத்து மாறலாம். ஆனால் 6 ஏர்பேக்குகள் வசதி ஸ்டாண்டர்டானது. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும், 6 ஏர்பேக்குகள் வசதி இருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் ஒட்டுமொத்தமாக 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், 26 பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டானது. அதாவது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் இந்த 26 பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும். எனவே பாதுகாப்பை பற்றி அச்சம் கொள்ளாமல், டிரைவிங்கை 'என்ஜாய்' செய்யலாம்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் அனைத்து வசதிகளும் முழுமையாக நிரம்பிய டாப் வேரியண்ட்டின் விலையோ 10.51 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் நல்ல ஆப்ஷன். நல்ல மைலேஜ், அதிநவீன மற்றும் பாதுகாப்பு வசதிகள், சரியான விலை நிர்ணயம் போன்றவை எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ப்ளஸ் பாயிண்ட்கள். இது போன்ற ப்ளஸ் பாயிண்ட்களால், கூடிய விரைவிலேயே ஹூண்டாய் எக்ஸ்டர் சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








