27 கிமீ மைலேஜ் குடுக்கற காரை அடிமாட்டு ரேட்ல விக்கறாங்களா! மொத்த கூட்டமும் ஷோரூம்லதான் இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டுமென்றால், கண்டிப்பாக ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) நினைவிற்கு வரும். மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.51 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலை நிர்ணயம் காரணமாக, ஹூண்டாய் எக்ஸ்டர் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.
நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஹூண்டாய் எக்ஸ்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக, அந்த காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் வரவேற்பை நாம் புரிந்து கொள்ளலாம். நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 6,068 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5,270 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 798 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விலை குறைவானது என்பதுடன், நல்ல மைலேஜ் வழங்க கூடியதாகவும் உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. அத்துடன் இந்த காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் ட்யூயல் கேமராக்கள் உடன் டேஷ்கேம் போன்றவை எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டி மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்கிறது. டாடா பன்ச் தவிர, நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகிய கார்களுக்கும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாகவே கருதப்படுகிறது.
நல்ல பிராண்ட் இமேஜ் உடன், ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். அதிக மைலேஜ் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான வசதிகள் இடம்பெற்றிருப்பது ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பலம்.


Click it and Unblock the Notifications








