வெறும் 6 லட்சம்தான்! இந்த 28 கிமீ மைலேஜ் கார்ல சன்ரூஃப், 6 ஏர்பேக்லாம் இருக்கா! சண்முகம் வண்டிய ஷோரூம் விடு!
இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' இருக்கிறது. குறிப்பாக ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களை, இந்திய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். அப்படி இந்திய வாடிக்கையாளர்களால் அதிக அளவில் வாங்கப்படும் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களில் ஹூண்டாய் எக்ஸ்டரும் (Hyundai Exter) ஒன்றாகும்.
இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 10.51 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளன. அத்துடன் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்படுகின்றன.
இதில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் வசதி மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் வியூ கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் வழங்கப்படுகின்றன.

மற்ற வசதிகளை பொறுத்தவரையில், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை எல்லாம் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன.
ஓரளவிற்கு விலை குறைவானது, அதிக மைலேஜ் வழங்க கூடியது மற்றும் அதிநவீன வசதிகள் நிரம்பியது உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் எக்ஸ்டர் மிகவும் பிரபலம். ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு சரியாக அமையவில்லை.
காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. இதன்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 5,075 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 6,037 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 962 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16 சதவீத வீழ்ச்சி ஆகும். எனினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்பதால், கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து ஹூண்டாய் எக்ஸ்டர் மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஓரளவிற்கு குறைவான விலையில், நல்ல மைலேஜ் வழங்க கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் நல்ல ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் எக்ஸ்டர் கருதப்படுகிறது. அத்துடன் ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கும், ஹூண்டாய் எக்ஸ்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்களில் ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








