இனி பாக்கதான போற இந்த காளியோட ஆட்டத்த! 27 கிலோ மீட்டருக்கு மேல மைலேஜ் குடுக்கற இந்த காரோட விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது டாடா பன்ச் (Tata Punch) காருடன் போட்டியிட்டு வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஆகும். மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது என்பதால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை மிகவும் குறைவு. இதன் காரணமாக ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதால், ஹூண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்டர் கருதப்படுகிறது.

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு சிறப்பாக அமையவில்லை. ஆம், விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை ஹூண்டாய் எக்ஸ்டர் சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

Hyundai Exter

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 8,475 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 5,901 ஆக குறைந்துள்ளது. இது 30 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் வரும் மாதங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது விலை குறைவான கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 10.51 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Hyundai Exter Side Design

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் செயல்திறனை (Performance) பொறுத்தவரையில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.2 லிட்டர் இன்ஜின் ஆகும். ஆனால் இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது.

பெட்ரோல் வெர்ஷன் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சிஎன்ஜி வெர்ஷன் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும்.

இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இதன் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானதாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய அதிக மைலேஜ் வழங்கும் கார்களில் ஒன்றாகும். எனவே கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து ஹூண்டாய் எக்ஸ்டர் மீண்டு வந்து விடும் என நாம் நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 13:30 [IST]
English summary
Hyundai exter sales report march 2025 30 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+