28 கிமீ மைலேஜ்! டாடாவை கதற விடும் விலை குறைவான ஹூண்டாய் கார்! இந்த ரேட்ல விக்கறதுக்குலாம் பெரிய மனசு வேணும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 5,705 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 5,747 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 42 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 0.73 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Hyundai Exter Side Design

இதேபோல் மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், ஹூண்டாய் எக்ஸ்டர் சிறிய அளவிலான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,294 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த நவம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 5,705 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதாவது இந்த வகையில் பார்த்தால் 589 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 9.36 சதவீத வீழ்ச்சி ஆகும். இவை சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பதால், கூடிய விரைவிலேயே, ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Punch

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.68 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இது போன்ற சிறப்பம்சங்கள் உடன், ஹூண்டாய் எக்ஸ்டர், சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் உள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிநவீன வசதிகள் உடன், அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் நல்ல ஆப்ஷன்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்கிறது. அத்துடன் நிஸான் மேக்னைட் (Nissan Magnite), ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 16, 2025, 18:55 [IST]
English summary
Hyundai exter sales report november 2025 9 36 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+