27 கிமீ மைலேஜ் குடுக்கும் காரை ஹூண்டாய் இவ்ளோ கம்மியான விலையில் விக்குதா! டாடாவுக்கு டஃப் குடுக்குது!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,294 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 7,127 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 833 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 12 சதவீத வீழ்ச்சி ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் தீபாவளி பண்டிகை காலம் உள்ளிட்ட 2 மிக முக்கியமான காரணங்களால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏராளமான கார்களும், டூவீலர்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் சரிவை கண்டுள்ளது.
இருப்பினும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஓரளவிற்கு விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் கார், கூடிய விரைவிலேயே இந்த சரிவில் இருந்து மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.68 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காருடைய டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.61 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.
அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குபவையாக உள்ளன. விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது போன்ற சிறப்பம்சங்கள் உடன் சேர்த்து, ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கொண்டுள்ளது.
இதில், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ட்யூயல் கேமரா உடன் டேஷ்கேம், 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் எக்ஸ்டர் கருதப்படுகிறது. எனவே டாடா பன்ச் காருக்கு மாற்றாக ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








