வெறும் அஞ்சரை லட்சத்துக்கு அதிநவீன வசதிகளுடன் ஹூண்டாய் காரா! 28 கிமீ மைலேஜ் வேற தருது! டாடாவுக்கு செக்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இந்த காரின், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,643 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6,908 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,265 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Hyundai Exter Side Design

இது 18.31 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் வரும் மாதங்களில், ஹூண்டாய் எக்ஸ்டர் கார், இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என நாம் உறுதியாக நம்பலாம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.68 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.61 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

Hyundai Exter Side View

இது மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளூலிங்க் உடன் 20.32 செமீ ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளையும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கொண்டுள்ளது. அத்துடன் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.

இதில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் வசதி மிகவும் முக்கியமானது ஆகும். இதுதவிர வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரில் வழங்குகிறது.

மைலேஜை (Mileage) பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள், அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. எனவே இது சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்திய சந்தையில் டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. கவர்ச்சிகரமான டிசைன், அதிநவீன வசதிகள் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகியவை எல்லாம், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ப்ளஸ் பாயிண்ட்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 13, 2025, 14:31 [IST]
English summary
Hyundai exter sales report september 2025 18 31 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+