வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல பிரீமியமான ஹூண்டாய் காரா! மாருதி ஸ்விஃப்ட் வாங்கறதுக்கு இதை வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 3,908 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 5,365 ஆக இருந்தது.

Hyundai Grand i10 Nios Side View

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1,457 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 27 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் ரக கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks August 2025), ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு, 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

Hyundai Grand i10 Nios

இந்த பட்டியலில் முதல் 7 இடங்களில் முறையே, மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி ஆல்டோ, டாடா டியாகோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், 8வது இடத்தில் உள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.47 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.92 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். மிகவும் விலை குறைவான காராக இருந்தாலும் கூட, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில், ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் ஸ்மார்ட் கீ, டைப் சி ஃபாஸ்ட் யூஎஸ்பி சார்ஜர், 20.25 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உடன் 8.89 செமீ ஸ்பீடோமீட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் கேமரா, ரியர் டீஃபாகர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மேனுவல், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஏஎம்டி மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல்/சிஎன்ஜி மேனுவல் ஆகிய இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த காராக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) போன்ற கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 24, 2025, 23:19 [IST]
English summary
Hyundai grand i10 nios sales report august 2025 27 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+