ஹூண்டாயின் இந்த பிரபலமான காரை வாங்க ஆள் இல்ல... மாருதிக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் 14 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 5,247 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4,489 ஆக சரிந்துள்ளது. இது 14 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Hyundai Grand i10 Nios

இது ஓரளவிற்கான வீழ்ச்சி மட்டுமே என்பதால், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் கூடிய விரைவில், இந்த சரிவில் இருந்து மீண்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 5.98 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.62 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 83 PS மற்றும் 114 Nm ஆகும்.

Hyundai Grand i10 Nios Side Design

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் இதன் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட் குறைவாக இருக்கும். அதாவது இதன் பவர் அவுட்புட் 69 PS மற்றும் 95 Nm மட்டுமே.

அதேபோல் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியோஸ் காரில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட வசதிகளும் கூட இந்த காரில் கொடுக்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) போன்ற ஹேட்ச்பேக் கார்களுடன் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது. இது மிடிஸ் க்ளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு கார் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2025, 16:46 [IST]
English summary
Hyundai grand i10 nios sales report december 2024 14 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+