ரொம்ப வருஷம் ஆயிருச்சு! ஆனா பூமர் மாதிரி விலை பெருசா ஏறாம அப்படியே இருக்கு! மாருதி ஸ்விஃப்ட்டுக்கு செம டஃப்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹூண்டாய் ஐ10 காரின் 3வது தலைமுறை மாடல்தான், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2019ம் ஆண்டில் இருந்தே, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

Hyundai Grand i10 Nios Side View

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு, சிறப்பாக அமையவில்லை. ஆம், விற்பனையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், மிகவும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாகவே இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 4,559 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 5,667 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Hyundai Grand i10 Nios

அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 1,108 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், விற்பனையில் 20 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks November 2025), ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், 7வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஆல்டோ, டாடா டியாகோ மற்றும் டொயோட்டா க்ளான்சா ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், 7வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.47 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 7.92 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.99 லட்ச ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது, கடந்த 6 ஆண்டுகளில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 48 ஆயிரம் ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. விலை உயர்வு மிகவும் சிறிய அளவில் இருப்பதற்கு, மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை குறைத்ததுதான் காரணம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார், மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 21, 2025, 17:48 [IST]
English summary
Hyundai grand i10 nios sales report november 2025 20 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+