பிரபலமான ஹூண்டாய் காருக்கே இப்படி ஒரு நிலைமையா! இப்படி நடக்கும்னு யாரும் கொஞ்சம் கூட யோசிச்சிருக்க மாட்டாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஹூண்டாய் நிறுவனம் 5,426 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,235 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Hyundai Grand i10 Nios Side View

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 809 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனையில் 13 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், ரேடியேட்டர் க்ரில் அமைப்பு, எல்இடி பகல் நேர விளக்குகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Hyundai Grand i10 Nios

வசதிகளை (Features) பொறுத்தவரையில், டைப் சி ஃபாஸ்ட் யூஎஸ்பி சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஸ்மார்ட் கீ, மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே உடன் 8.89 செமீ ஸ்பீடோமீட்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை எல்லாம் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட், கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் ஏசி வெண்ட் மற்றும் 17.14 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் கூட, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரியர் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அம்சங்கள் எல்லாம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.47 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 7.92 லட்ச ரூபாயாக உள்ளது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) போன்ற கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 23:52 [IST]
English summary
Hyundai grand i10 nios sales report october 2025 13 per cent down
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+