நீங்க நினைக்கறதை விட விலை ரொம்ப கம்மி! மாருதி ஸ்விஃப்ட் வாங்கறதுக்கு பதிலா இந்த ஹூண்டாய் காரை வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இதன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 4,238 க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,103 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 865 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை 17 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks September 2025), ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு, 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, டாடா டியாகோ மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு, 6வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.47 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.92 லட்ச ரூபாயாக உள்ளது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது விலை குறைவான காராக இருந்தாலும், பாதுகாப்பிற்கு அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டிரைவர் ரியர் வியூ மானிட்டர் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features) கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் 20.25 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








