ரூ2.40 லட்சம் ஹூண்டாய் கார்களின் விலை குறையப்போகுது! மத்திய அரசை கையெடுத்து குடும்பிட்டு ஊரே பாராட்டுது!

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் ஹூண்டாய் நிறுவனம் வரி குறைப்பிற்கு பிறகு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை வெளியிறட்டுள்ளன. ஏற்கனவே, டாடா, ரெனால்ட், மஹிந்திரா ஆகிய நிறவனதங்கள் இதை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஹண்டாய் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் இந்தியாவில் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்நிறுவனத்தின் வாகன விலை குறையும் என எதிர்பார்க்கப்ட்டது. அதன்படியே ஹூண்டாய் நிறுவனம் ஜிஎஸ்டி குறைந்த பிறகு வாகனங்களின் விலை எவ்வளவு குறையும் என்ற விபரங்களை வெளியிட்டுள்ளது.

Hyundai GST Reduction Price list

ஹூண்டாய் நிறுவனம் தற்போது 9 மாடல்களை இந்தியாவில் விற்பவனை செய்து வருகிறது. அதன் படி நியோஸ், ஆரா, எக்ஸ்டர், ஐ20, வென்யூ, வெர்னா, கிரெட்டா, அல்கஸார், டக்ஸான் ஆகிய கார்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த கார்களின் விலை குறைப்பு குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இருப்பதிலேயே குறைவான விலை குறைப்பு என்றால் அது ரூ73,808 குறைந்துள்ளது தான். ஹூண்டாய் நியோஸ் காரின் விலை தான் அவ்வளவு குறைந்துள்ளது.

மாடல் குறையும் விலை
நியோஸ் 73,808
ஆரா 78,465
எக்ஸ்டர் 89,209
ஐ20 98,053
ஐ20 என்லைன் 1,08,116
வென்யூ 1,23,659
வென்யூ என்லைன் 1,19,390
வெர்னா 60,640
கிரெட்டா 72,145
கிரெட்டா என்லைன் 71,762
அல்கஸார் 75,376
டக்ஸன் 2,40,303

அடுத்தாக ஹூண்டாய் ஆரா காரின் விலை ரூ78,465 குறைந்துள்ளது. எக்ஸ்டர் காரின் விலை ரூ89,209 குறைந்துள்ளது. ஐ20 காரின் விலை ரூ98,053 குறைந்துள்ளது. ஐ20 என்லைன் காரின் விலை ரூ1,08,116 குறைந்துள்ளது. வென்யூ காரின் விலை ரூ1,23,659 குறைந்துள்ளது. வென்யூ என்லைன் காரின் விலை ரூ1,19,390 குறைந்துள்ளது. வெர்னா காரின் விலை ரூ60,640 குறைந்துள்ளது. கிரெட்டா காரின் விலை ரூ72,145 குறைந்துள்ளது. கிரெட்டா என்லைன் காரை பொருத்தவரை ரூ71,762 குறைந்துள்ளது. அல்கஸார் காரை பொருத்தவரை ரூ75,376 குறைந்துள்ளது. டக்ஸன் காரை பொருத்தவரை ரூ2,40,303 குறைந்துள்ளது. இருப்பதிலேயே அதிகம் விலை குறைந்தது இந்த காருக்கு தான்.

Hyundai GST Reduction Price list

இந்த விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலையிலிருந்த குறைக்கப்பட்ட விலைகள் ஆகும். இந்த பட்டிலை பார்க்கும் போதே ஹூண்டாய் வென்யூ என்லைன் வரைப்படிப்படியாக குறையும் விலை அதிகரித்து வந்த நிலையி் திடீரென வெர்னா கார் வந்தவுடன் விலை குறைந்துள்ளது. இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. வெர்னா, கிரெட்டா, கிரெட்டா என்லைன், அல்கஸார், டுஸான் ஆகிய கார்கள் எல்லாம் 40 சதவீத வரி செக்மெண்டிற்குள் வருகிறது. இதனால் பெரிய அளவில் விலை குறைப்பு இல்லை.

மற்ற கார்கள் எல்லாம் 18 சதவீத வரியில் வருகிறது. இதனால் அந்த கார்களின் விலை கணிசமாக குறைகிறது. இது போக மத்திய அரசு செஸ் வரி இல்லை என சொல்லிவிட்டதால் அதனால் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான விலை உயர்வு தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் இந்த விலைகுறைப்பால் மிகப்பெரிய அளவில் வாகன மார்கெட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai GST Reduction Price list

இதனால் வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு வாகன விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்த மாதம் வாகனங்களை விற்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வாகனங்களை நீங்கள் ஜிஎஸ்டி குறைந்த பிறகு வாங்க நினைத்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் கூட்ட நெரிசல் இருக்கும் இப்பொழுதே முடிந்தால் ஷோரூமிற்கு சென்று முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎஸ்டி குறைப்பு என்பது மிகப்பெரிய புரட்சியை இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இதனால் இந்தியா மக்கள் பெரிய அளவில் பலனடையப்போகிறார்கள். இது நிச்சயம் மக்களுக்கு நுகர்வு தன்மையை அதிகமாக்கும். இதனால் ஆட்டோமொபைல் மார்கெட்டில் இந்தியா மிகப்பெரிய நாடாக மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, September 7, 2025, 18:20 [IST]
English summary
Hyundai gst reduction price list full details
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X