ஒரு கி.மீ பயணிக்க வெறும் 47 பைசா தான் செலவு! விலை வெறும் ரூ 5.99 லட்சம் தான்!
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பிரைம் டாக்ஸி ரேஞ்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ், மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களை அடிப்படையாக கொண்ட டாக்ஸி மாடல்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது கமர்ஷியல் மொபிலிட்டி பிரிவில் களம் இறங்கியுள்ளது. இதன் பிரைம் ரேஞ்ச் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டாக்ஸி தொழிலில் உள்ளவர்களுக்கான புதிய வாகனங்களை வாங்க இந்த செக்மெண்டை டார்கெட் செய்துள்ளது. இந்த பிரிடவில் பிரைம் எச்பி என்ற கிராண்ட் ஐ10 நியோஸ் அடிப்படையிலான டாக்ஸி வெர்ஷனையும், பிரைம் எஸ்டி என்ற ஆரா காரின் அடிப்படையிலான டாக்ஸி காரை வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு கார்களையும் 1.2 லிட்டர் கப்பா 4 சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இதில் ஃபேக்டரியிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வேரியன்டும் வழ்ஙகப்பட்டுள்ளது. தினசரி பயன்பாடு மற்றும் குறைவான ஆப்ரேட்டிங் செலவு ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கியுள்ளது.
இந்த கார்கள் எல்லாம் அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வேகம் லிமிட் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரைம் எஸ்டி கார் 28.40 கி.மீ மைலேஜை சிஎன்ஜியில் வழங்குகிறது. பிரைம் எச்பி கார் 27.32 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் ஒரு கி.மீ பயணிக்க வெறும் 47 காசு தான் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த கார்களில் பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களாக வழங்கியுள்ளது. இந்த கார்களில் 6 ஏர்பேக், பின்பக்க ஏசி வென்ட், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ, பின்பக்க பார்க்கிங் சென்சார், எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்டிங், ஸ்டியரிங் மவுண்டில் ஆடியோ கண்ட்ரோல், டைப் சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன.
இந்த காரில் உள்ள 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பின்பக்க கேமரா, வாகனத்தின் லோகேஷனை டிராக் செய்யும் கருவி, 4 பானிக் பட்டன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த காரில் 5 ஆண்டுகள் வாரண்டி கவரேஜ், அல்லது 1.80 லட்சம் கி.மீ வரை வாரண்டியை வழங்கிறது.
இ்நத காருக்கு 72 மாதங்கள் ஃபைனாஸ் வழங்குகிறது. இந்த கார்களை வெறும் ரூ5000 முன்பணம் செலுத்தி புக்கிங் செய்யலாம். இந்த காரில் பிரைம் எச்பி கார் ரூ5.99 லட்சம் என்ற விலையிலும், பிரைம் எஸ்டி காரில் ரூ6.89 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக டாக்ஸி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களின் தேவையான குறைவான செலவு, அதிக மைலேஜ், பாராமரிப்பு செலவு குறைவு, பாதுகாப்பு அம்சங்கள் என பல்வேறு விதமான அம்சங்கள் இந்த காரில் இருப்பதால் இந்த காரை பலர் விரும்பி வாங்க வாய்ப்புள்ளது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டிற்கு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








