3.3 மில்லியன் விற்பனையை எட்டிய ஒற்றை கார் மாடல்! ஹூண்டாயோட தயாரிப்பு லேசு பட்டது இல்ல போலையே!!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் கார் மாடல் ஒன்று 3.3 மில்லியன் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ10 (i10) என்கிற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இப்போது கிராண்டு ஐ10 நியாஸ் (Grand i10 Nios) என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலே அந்த மாபெரும் விற்பனை சாதனையைப் படைத்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த குட்டியான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல் ஆகும்.

விற்பனைக்கு வந்ததில் இருந்தே இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியர்களிடத்தில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் இந்த கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹூண்டாய் ஐ10 உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

Maruti suzuki introduces six airbags as standard

அந்தவகையில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்தே இந்த கார் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகின்று. ஹூண்டாய் நிறுவனம் இந்த கார் மாடலை தமிழகத்தில் உள்ள ஆலையில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்த மாபெரும் விற்பனை சாதனையை ஹூண்டாய் ஐ10 கார் மாடல் படைத்திருக்கின்றது.

3.3 மில்லியன் யூனிட்டில் இந்தியாவில் மட்டும் விற்பனையாகியவை 2 மில்லியன் யூனிட்டுகள் ஆகும். மீதமுள்ள 1.3 மில்லியன் யூனிட்டுகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவில் இருந்து தெற்கு ஆப்பிரிக்கா, மெக்சிகோ, சிலி மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளுக்கே ஹூண்டாய் நிறுவனம் ஐ10 கார் மாடல்களை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், ஐ10 கார் மாடலை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை அது ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் மாடல் மூன்று விதமான பவர்டிரெயின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மேனுவல், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பை-ஃப்யூவல் கப்பா (பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் இயங்கும்) ஆகியவையே அவை ஆகும்.

இந்த மாதிரியான பன்முக ஆப்ஷன்களும், அதிக பிரீமியம் அம்சங்களை இது தாங்கியிருப்பதாலுமே நல்ல வரவேற்பை நாட்டில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது வெளியாகி இருக்கும் தகவலும் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் ஐ10 கார் மாடல் ஹூண்டாய் நிறுவனம் 2017 ஆம் ஆம்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.

இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, உள்ளிட்டவற்றை இந்த காரில் நிறுவனம் வழங்குகின்றது. இதுமட்டுமல்ல இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எல்இடி டிஆர்எல், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.

இதுதவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 8 அங்குல தொடு திரை சிஸ்டம் போன்றவற்றையும் ஹூண்டாய் இந்த காரில் ஹேட்ச்பேக் காரில் வழங்குகின்றது. இந்த திரை ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளைத் தங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் மாடல் ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்போது ஐ10 கார் மாடல் பற்றி வெளியாகி இருக்கும் தகவல் அமைந்திருக்கின்றது. வரும் நாட்களிலும் இதுமாதிரியான பல்வேறு சாதனைகளை கிராண்டு ஐ10 நியாஸ் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 13:32 [IST]
English summary
Hyundai i10 surpasses 30 lakh sales worldwide highlights key achievements
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+