ஜிஎஸ்டி குறைத்தும் எந்த பலனும் இல்ல... ஹூண்டாய் கார் கம்பெனியின் நிலைமை இப்படி ஆகும்னு யாரும் எதிர்பார்க்கல!

ஜிஎஸ்டி (GST) திருத்தங்கள் மற்றும் தீபாவளி (Diwali) பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வந்ததன் விளைவால் கடந்த அக்டோபர் மாதம் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், ஹூண்டாய் (Hyundai) மட்டும் விதிவிலக்காக கார்கள் விற்பனையில் சற்று சரிவை கண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த தென்கொரிய கார் நிறுவனத்தை கடந்த மாத கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகிய நிறுவனங்கள் அதிக கார்களை விற்பனை செய்து, நான்காவது இடத்திற்கு தள்ளியுள்ளன.

hyundai india cars-wise sales report

கடந்த 2025 அக்டோபரில் இந்தியாவில் மொத்தம் 53,792 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட 55,568 ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடுகையில் 3% குறைவாகும். கடந்த மாதம், ஹூண்டாயில் இருந்து 10 கார் மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட போதிலும், அவற்றுள் பெரும்பாலான கார் மாடல்கள் சரிவைச் சந்தித்துள்ளன.

வழக்கம்போல், கடந்த அக்டோபர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் காராக கிரெட்டா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2024 அக்டோபரை காட்டிலும் 5% அதிகமாக 18,381 கிரெட்டா கார்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17,497 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hyundai india cars-wise sales report

முதல் தலைமுறை ஹூண்டாய் வென்யூ, கடந்த சில மாதங்களாக விற்பனையில் சோபிக்கவில்லை என்றாலும் கடந்த அக்டோபர் மாதத்தில் 11,738 யூனிட்டுகள் விற்பனையாகி, கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் விற்பனையான 10,901 யூனிட்டுகளை விட 8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை குறைந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா பன்ச் காருடன் போட்டியிடும் ஹூண்டாய் எக்ஸ்டர், 2025 அக்டோபரில் 6,294 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2024 அக்டோபரில் 7,127 எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த மாதம் விற்பனையில் முன்னேற்றம் கண்ட மற்றொரு ஹூண்டாய் கார், அவ்ரா ஆகும்.

hyundai india cars-wise sales report

இதன் விற்பனை 21% உயர்ந்து, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 4,805 யூனிட்டுகளில் இருந்து 5,815 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கடுத்துள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனை 13% குறைந்து, 6,235 யூனிட்டுகளில் இருந்து 5,426 யூனிட்டுகளாகச் சரிந்துள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்த வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் ஐ20-ன் விற்பனை 2024 அக்டோபரை காட்டிலும் 2025 அக்டோபரில் சுமார் 25% சரிவைக் கண்டுள்ளது.

2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட 5,354 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் 4,023 ஹூண்டாய் ஐ20 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்துள்ள ஹூண்டாய் அல்கஸார் மற்றும் வெர்னா கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் இன்னும் மோசமாக இருந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில் 2,204 மற்றும் 1,272 யூனிட்டுகளில் இருந்து கடந்த மாதத்தில் வெறும் 1,259 மற்றும் 824 யூனிட்டுகளாக இந்த கார்களின் விற்பனை சரிவை கண்டுள்ளது.

hyundai india cars-wise sales report
Model October 2025 Sales October 2024 Sales Difference
Hyundai Creta 18,381 17,497 5%
Hyundai Venue 11,738 10,901 8%
Hyundai Exter 6,294 7,127 -12%
Hyundai Aura 5,815 4,805 21%
Hyundai Grand i10 5,426 6,235 -13%
Hyundai i20 4,023 5,354 -25%
Hyundai Alcazar 1,259 2,204 -43%
Hyundai Verna 824 1,272 -35%
Hyundai Tucson 26 141 -82%
Hyundai Ioniq 5 6 32 -81%
Total 53,792 55,568 -3%

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவற்றுடன், 26 டக்சன் கார்கள் மற்றும் 6 ஐயோனிக்-5 எலெக்ட்ரிக் கார்களையும் ஹூண்டாய் விற்பனை செய்திருந்தாலும், இந்த கார்களுடன் ஹூண்டாயின் மொத்த விற்பனை கணிசமாக குறைந்திருப்பது, இந்த நிறுவனத்திற்கு பெரிதும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில், மற்ற கார் நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகை கால தேவைகளினால் பெரிய அளவில் விற்பனை வளர்ச்சியை கண்டிருக்கும் நிலையில், ஹூண்டாயின் விற்பனை குறைந்திருப்பது நிச்சயம் ஏமாற்றமாக இருந்திருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 21:34 [IST]
English summary
Hyundai india cars wise sales report of october 2025 creta as usual top on list
மேலும்... #hyundai #car sales #hyundai creta #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X