வெறும் ரூ7 லட்சத்துக்கு இப்படிப்பட்ட காரா? 3 கார்களை அப்டேட் செய்த ஹூண்டாய்!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்.எம்.ஐ.எல்) சமீபத்தில் வென்யூ, வெர்னா மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட பல பிரபல மாடல்களுக்கு புதிய அம்சங்கள் மற்றும் வேரியன்ட்களுடன் அதன் வரிசையை அப்டேட் செய்துள்ளது.. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி இந்த அப்டேட் செய்துள்ளது.
குறிப்பிடத்தக்க புதிய அறிமுகங்களில் வென்யூவிற்கான கப்பா 1.2 லிட்டர் எம்.பி.ஐ பெட்ரோல் எஸ்.எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் எம்.டி வேரியன்ட் உள்ளது, இதன் விலை ரூ. 10,79,300 (எக்ஸ்-ஷோரூம்). இந்த புதிய வேரியன்ட், மற்ற மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளுடன், அதன் அம்சங்களில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், பெரிய 8-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஸ்மார்ட் கீ அமைப்பு போன்ற அம்சங்களை ஒருங்கிணைக்கும் ஹூண்டாயின் முயற்சியை வெளிப்படுத்துகிறது.

வென்யூவின் புதிய வேரியன்டைத் தவிர, வெர்னாவும் 1.5 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ பெட்ரோல் எஸ்(ஓ) டி.சி.டி மற்றும் 1.5 லிட்டர் எம்.பி.ஐ பெட்ரோல் எஸ் ஐ.வி.டி என்ற இரண்டு புதிய ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை முறையே ரூ. 15,26,900 மற்றும் ரூ. 13,62,400 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றன. இந்த மாடல்கள் பெடல் ஷிஃப்டர்கள், டிரைவ் ஆப்ஷன்கள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற ஆடம்பர அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இது மிட் சைஸ் செடான் சந்தையில் ஹூண்டாயின் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. கிராண்ட் ஐ10 நியோஸும் தனித்து நிற்கவில்லை, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷகளில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஸ்போர்ட்ஸ் (ஓ) வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது அந்த காரின் மீதான ஈர்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கிறது.

ஹூண்டாயின் இரவு நேர பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான கிராண்ட் ஐ10 நியோஸின் கார்ப்பரேட் மாறுபாட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள சேர்த்து வெளிப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் மாடல்களுக்கான விலைகள் வென்யூவிற்கு ரூ. 9,28,000 எனவும், வெர்னாவுக்கு ரூ. 12,37,400 மற்றும் ஐ10 நியோஸ் லைன்அப் ரூ. 7,09,100 என துவங்குகிறது.
இது இந்த வாகனங்களை அவற்றின் பிரிவுகளில் போட்டித்தன்மை வாய்ந்த ஆப்ஷன்களாக ஆக்குகிறது. வெர்னா 1.5 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ பெட்ரோல் வேரியன்ட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணக்கமான 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16-இன்ச் கருப்பு அலாய் வீல்கள் மற்றும் பல பிரீமியம் வசதிகள் உள்ளிட்ட விரிவான தொழிற்நுட்ப தொகுப்பால் தனித்து நிற்கிறது.

கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட ஸ்மார்ட் கீ மற்றும் ஸ்டைலான குரோம் வெளிப்புற கதவு கைப்பிடிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஹூண்டாயின் போர்ட்ஃபோலியோவை மேலும் வளப்படுத்துகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநர் தருண் கார்க் இந்த அப்டேட்கள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், "நமது 3 முக்கிய மாடல்களில் உள்ள சமீபத்திய தயாரிப்பு அப்டேட்கள்கள் புதிய தொழில்நுட்பம், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குவதில் ஹூண்டாயின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இந்த மேம்பாடுகள் நம் வாடிக்கையாளர்களுடன் ஒத்துப்போய் அவர்களின் டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தும் என்று நம்புகிறோம்." என கூறினார்.
இந்த அப்டேட்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் ஆப்ஷன்களுக்கு ஏற்ப ஹூண்டாய் தனது சந்தை நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களை இணைத்து, செயல்திறன் மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் மட்டுமல்லாமல், அதைத் தாண்டும் புதிய வாகனங்களை வாடிக்கையாளர்களை ஈரக்க விரும்புகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய வேரியன்ட்கள் மற்றும் அம்சங்கள் வெளியாகும் போது, ஹூண்டாய் ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய பங்கைப் பிடிக்க தயாராக உள்ளது. இது இந்தியாவில் இந்நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய திசையை இந்த அப்டேட் எடுத்துகாட்டுகிறது. இதன் மூலம் இந்த காரின் விற்பனை அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









